வெளிநாட்டில் வேலை வேண்டுமா?

வெளிநாட்டில் வேலை என்பது இளைஞர்கள் பலரின் கனவு. அந்த கனவிற்காக இளைஞர்களும், அவர் தம் பெற்றோரும் படும்பாடு சொல்லி மாளாது. 
வெளிநாட்டில் வேலை வேண்டுமா?

வெளிநாட்டில் வேலை என்பது இளைஞர்கள் பலரின் கனவு. அந்த கனவிற்காக இளைஞர்களும், அவர் தம் பெற்றோரும் படும்பாடு சொல்லி மாளாது. 

வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆசையுடன் இருப்பவர்களுக்கு உதவி செய்கிறது தமிழக அரசின் நிறுவனமான ஓவர்சீஸ் மேன்பவர்  கார்ப்பரேஷன் லிமிடெட்   எனப்படும் ஓ.எம்.சி.எல். நிறுவனம். இந்தியாவில் மனிதவளம் மற்ற நாடுகளை விட அதிகம். இதில் தகுதி வாய்ந்த மனித வளங்களை, தேவையான நாடுகளுக்குப் பரிந்துரை செய்யும் பணியை 
இந்நிறுவனம் செய்து வருகிறது.  

தகுதி வாய்ந்த அனுபவமிக்க இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களை வெளிநாட்டிற்கு நல்ல நிறுவனத்திற்கு வேலைக்கு அனுப்பி வைப்பதுடன், அவர்
களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கி, உரிய அதிகாரிகளிடம் உரிய சான்றுகளைப் பெற்று தந்து, வெளிநாட்டுப் பயணத்திற்கான பயண வசதிகளையும் இந்நிறுவனம் செய்து தருகிறது. 

ஓஎம்சிஎல் என்பது ஒரு வரையறுக்கப்பட்ட நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் ஐஏஎஸ் அந்தஸ்தில் ஒரு மேலாண் இயக்குநரும், 3 இயக்குநர்களும் உள்ளனர். மத்திய அரசின்  தொழிலாளர் அமைச்சகத்தின் பதிவுச் சான்றிதழையும் இந்நிறுவனம் வைத்திருக்கிறது. 

இந்நிறுவனத்தில் பதிவு செய்ய விரும்புபவர்கள் ஆன்-லைன் அல்லது ஆஃப்-லைன் முறையில் பதிவு செய்து கொள்ளலாம். ஆப்-லைனில் பதிவு செய்ய விரும்புபவர்கள் சென்னை அலுவலகத்தில் நேரடியாகச் சென்று பதிவு செய்ய வேண்டும். 

விண்ணப்பதாரர்கள் தாங்கள் பணி செய்ய விரும்பும் பிரிவில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். பாஸ்போர்ட் மற்றும் அனுபவச் சான்று அவசியம். ஒரு முறை பதிவு செய்தால் 48 மாதங்கள் அந்த பதிவு அமலில் இருக்கும். அதன் பின் மீண்டும் புதுப்பிக்க வேண்டும். 

10, பிளஸ் 2, ஐடிஐ, இளங்கலைப் பட்டம், பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.590 ஆகும். முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், பொறியாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு ரூ. 1003 பதிவுக் கட்டணம் ஆகும். மருத்துவப் படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.1770 பதிவுக் கட்டணமாகும். 

இந்நிறுவனத்தில் பதிவு செய்வதன் மூலம், சவுதி அரேபியா, குவைத், யுஏஇ, மாலத்தீவு, பங்களாதேஷ், சூடான், பிரான்ஸ், ஓமன், பஹ்ரைன், கனடா,சிங்கப்பூர், ஜோர்டான், ஏமன், லிபியா, கத்தார், அயர்லாந்த் போன்ற நாடுகளில் வேலை வாய்ப்பைப் பெற முடியும். 

இந்நிறுவனத்தில் பதிவு செய்ய  https://www.omcmanpower.com/ என்ற இணையதளத்திற்குள் சென்று  சைன் -ஆப் பட்டனைக் கிளிக் செய்து விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். 

இந்த தளத்தில் வரும் கரண்ட் ஓபனிங் என்பதைக் கிளிக் செய்தால் வெளிநாடு
களிலுள்ள வேலை வாய்ப்பு விவரங்கள் பட்டியலாக வரும். அதில் நமக்கு தேவையான வேலைக்கு நாம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com