வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 312

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 312


ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது மன்னரைப் பார்க்க, அந்தரப்புரத்தில் இருந்து லலிதாங்கி கோபமாக வருகிறாள். லலிதாங்கியை சமாதானப்படுத்தும் நோக்கில் மன்னர் அவளிடம் அளவளாவிக் கொண்டிருக்கையில் சட்ட அமைச்சர்  அங்கு அழுதபடி வருகிறார். அவர் தன்னை சில அமைச்சர்கள் ஒரு சைபர் கிரைமில் மாட்ட வைத்து அவதூறு செய்வதாகப் புலம்புகிறார். அதை ஒட்டி கணேஷும் ஜூலியும் பேசிக் கொண்டிருக்கையில் ஒருவரை உச்சாணிக் கொம்பில் தூக்கி வைப்பது பற்றி ஒரு மரபுத்தொடர் ஆங்கிலத்தில் உள்ளது என ஜூலி சொல்லுகிறது. அது என்னவெனப் பார்ப்போமா?

ஜூலி: கணேஷ், பல நூற்றாண்டுகளுக்கு முன் சாக்ரடீஸ் எனும் கிரேக்க அறிஞர் ஒரு முக்கியமான அறிவுரையை இளைஞர்களுக்கு நல்கினார். என்ன தெரியுமா? 
கணேஷ்: அப்படியா? என்ன அறிவுரை? 
ஜூலி: நீ உன்னை எந்த அளவுக்கு மதிக்கிறாயோ அந்த அளவுக்கு உன் காதலியை, காதலனை மதித்தால் போதும். உன்னை விட உயரமான ஓர் இடத்தில் அவர்களைத் தூக்கி வைத்தால் அவர்கள் உன்னை மதிக்காதிருப்பதுடன்,
உன்னை உள்ளூர வெறுக்கவும் தொடங்கி விடுவார்கள். அதாவது do not put people on a pedestal  என்றார். அதன் பொருள் do not give someone uncritical respect or admiration. கேள்விக்கு அப்பாலான மரியாதையையோ பெருமிதத்தையோ ஒருவரிடம் காட்டாதே. ஏனென்றால் அப்படிச் செய்தால் அவர்களை நாம் நிஜ மனிதர்களாக அல்ல; லட்சியங்களாக, கருத்துருவங்களாக நடத்துகிறோம் எனப் பொருள் வந்து விடும். That is, we start treating them as an ideal rather than a real person. 

கணேஷ்: ஐக்ங்ஹப்? அப்படி என்றால்? 
ஜூலி: காதல் என்றால் ஒரு தூய கருத்துரு. ஓர் அப்பழுக்கற்ற உணர்ச்சி.  a pure, unadulterated concept. நிஜத்தில் காதல் அப்படி இருப்பதில்லை. அது அன்பு, வெறுப்பு, பயம், ஆறுதல், possessiveness, பாலுறவு, பணம், சுயநலம், கட்டுப்பாடுகள், அதிகார ஆசை என 
விசயங்களின் கலவையாக இருக்கிறது. அது நொடிக்கு நொடி மாறிக் கொண்டு இருக்கிறது. ஒருவரை உன்னத
மானவராக, அவர் கணவனோ, மனைவியோ, காதலனோ, காதலியோ, நாம் பார்க்க ஆரம்பித்த மறுநொடி அவரை மனிதனாகப் பார்க்கிற திறனை இழந்து விடுவோம். 
கணேஷ்: ஆனால் மனிதர்களுக்குப் பிடித்த இசையே ஜால்ரா தானே? 
ஜூலி:  அது இருக்கட்டும். நாம சட்ட  அமைச்சரின் பிரச்னையைக் கேட்போம்.
சட்ட அமைச்சர்  மன்னரிடம்: மன்னர் மன்னா... எனக்கு நடந்த துன்பம் இந்த உலகில் யாருக்குமே வரக் கூடாது. Its a tragedy beyond comprehension.

கணேஷ்: என்ன பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்றாரு! காம்ப்ரிஹென்ஷன் என்றால் தேர்வில் ஒரு பத்தியைக் கொடுத்து படித்து கீழே தரப்பட்டுள்ள கேள்விகளுக்குப் பதில் எழுத சொல்வாங்களே அதானே?
ஜூலி: That is comprehension exercise. ஒரு பத்தியை படித்து நம்மால் பெற இயல்கிற புரிதலைச் சோதிப்பதற்கான ஒரு பயிற்சி. சொல்லொணா துயரம்னு தமிழ்ல சொல்றோமே அதே போல எளிய மானுடப் புரிதலுக்கு சுலபத்தில் அகப்படாத படியான துன்பம், அழிவு நிகழும் போது எனும் பொருளில் tragedy beyond comprehension என்பதைப் பயன்
படுத்துவார்கள். ஒரு மழைவெள்ளத்திலோ கொடுமையான தொற்றுநோயிலோ மக்கள் கூட்டம் கூட்டமாக மடிவதை அப்படிச் சொல்லலாம். 
கணேஷ்: நம்முடைய அமைச்சருக்கு வந்த சொல்லில் அடங்காத துயரம் என்னென்னு கேட்போம்.

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com