வேலை... வேலை... வேலை...

காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு விளையாட்டு பிரிவுகளில் ஏதாவதொரு பிரிவில் தேசிய, மாநில அல்லது பல்கலைக்கழக அளவில் விளையாடியிருக்க வேண்டும்.
வேலை... வேலை... வேலை...

வருமானவரித் துறையில்  வேலை 

பணி: இன்ஸ்பெக்டர் ஆஃப் இன்கம் டாக்ஸ்  
காலியிடங்கள்: 03
வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.44,900 - ரூ.1,42,400
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி:  டாக்ஸ் அசிஸ்டன்ட்   
காலியிடங்கள்: 13
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,500 - ரூ.81,100
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒரு மணி நேரத்தில் 8000 எழுத்துகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: மல்ட்டி டாஸ்க்கிங் ஸ்டாப்  
காலியிடங்கள்: 12
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000 - ரூ. 56,900
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு விளையாட்டு பிரிவுகளில் ஏதாவதொரு பிரிவில் தேசிய, மாநில அல்லது பல்கலைக்கழக அளவில் விளையாடியிருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு மற்றும் விளையாட்டுத் தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:   www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் முகவரிக்கு பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும். 

முகவரி: Income Tax Officer(HQ)(Admin), O/o Principal Chief Commissiner of Income Tax, UP(East), Aayakar Bhawan, 5, Ashok Marg, Lucknow } 226 001. 

மேலும் விவரங்கள் அறிய: https://www.incometaxindia.gov.in/Lists/Recruitment%20Notices/Attachments/19/Scan}10}Aug}2021.pdf  என்ற லிங்க்கை கிளிக் செய்து பாருங்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 30.09.2021 

தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

பணி: இளநிலை செயலக உதவியாளர்(பொது)
காலியிடங்கள்: 05

பணி: இளநிலை செயலக உதவியாளர்(நிதி)
காலியிடங்கள்: 03

பணி: இளநிலை செயலக உதவியாளர்(பண்டக மற்றும் கொள்முதல்)
காலியிடங்கள்: 02
வயது வரம்பு:  28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,900 - ரூ.63,200

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். நிதிப் பிரிவு பணிக்கு மட்டும் கணக்கியல் துறையில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.  

தேர்வு செய்யப்படும் முறை: தட்டச்சு தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Director, CSIR}National Botanical Research Institute, Lucknow என்ற பெயருக்கு டி.டியாக எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nbri.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான அனைத்து நகல் சான்றிதழ்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Controller of Administration, CSIR}NBRI RanaPratap Marg, Lucknow}225 001.

மேலும் விவரங்களுக்கு: https://nbri.res.in/media/Advt.}JSA}02}2021.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்து பாருங்கள். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 30.09.2021 


தமிழ்நாடு மின்சார ஒழுங்கு ஆணையத்தில்  வேலை 


பணி: பெர்சனல் அசிஸ்டன்ட் டூ டைரக்டர்  - 01
சம்பளம்: மாதம் ரூ.47,000

பணி: அசிஸ்டன்ட் (லீகல்)  - 01
சம்பளம்: மாதம் ரூ.26,000

பணி: அசிஸ்டன்ட்  - 01
சம்பளம்: மாதம் ரூ.26,000

தகுதி: பொறியியல்துறை பட்டதாரிகள், சட்டத்துறை பட்டதாரிகள், வணிகவியல் துறையில் முதுகலைப்  பட்டம் சிஏ, ஐசிடபுள்யுஏ முடித்தவர்கள் மற்றும் ஆங்கிலம் தட்டச்சில் உயர்நிலை தேர்ச்சி பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.01.2021 தேதியின்படி 25 வயதுக்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர் குறித்த சுய விவரங்களை கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The Secretary, Tamil Nadu
Electricity Regulatory Commission, 4
th Floor, SIDCO Corporate Office Building,
Thiru.vi.ka Industrial Estate, Guindy, Chennai 600 032

மேலும் விவரங்கள் அறிய:

http://www.tnerc.gov.in/PressRelease/files/PR}070920211807Eng.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.  

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 30.09.2021

இந்திய விமானப் படையில்  வேலை 

மொத்த காலியிடங்கள்: 174 

பணி : குரூப் "சி' சிவிலியன்  
தகுதி : 10, பிளஸ் 2 தேர்ச்சி, ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 

வயது வரம்பு : 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.29,300 - ரூ.39,800 வழங்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை : அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு விண்ணப்பத்தை தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்ட 30 நாள்களுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விவரங்கள் அறிய: www.davp.nic.in http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_16_2122b.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 2.10.2021

- இரா.வெங்கடேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com