பழைய அறிதிறன் பேசி... வாட்ஸ்ஆப் இல்லை!

பல கோடி பேர் பயன்படுத்தி வரும் வாட்ஸ்ஆப் சேவை, பழைய அறிதிறன் பேசிகளில் 31-ஆம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது.
பழைய அறிதிறன் பேசி... வாட்ஸ்ஆப் இல்லை!


பல கோடி பேர் பயன்படுத்தி வரும் வாட்ஸ்ஆப் சேவை, பழைய அறிதிறன் பேசிகளில் 31-ஆம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது. வாட்ஆப் செயலியை இயக்கி வரும் ஆண்ட்ராய்டு நிறுவனம் பழைய அறிதிறன் பேசிகளுக்கு தேவையான அப்டேட்களை உருவாக்காததே இதற்குக் காரணம்.

பழைய வெர்ஷன் கொண்ட அறிதிறன் பேசிகளின் பயன்பாடு குறைந்து வருவதும், வாட்ஸ் ஆப்களுக்கு தேவையான புதிய அப்டேட்களைச் சேமிக்க கூடுதல் இடம் தேவை என்பதும் பழைய அறிதிறன் பேசிகளுக்கு தேவையான அப்டேட்களை உருவாக்காததற்கு இன்னொரு காரணமாகும்.

இந்த வகையிலான அறிதிறன் பேசிகளை வைத்திருப்போர்,  வாட்ஸ்ஆப் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்த விரும்பினால்  புதிய அறிதிறன்பேசிகளுக்குதான் மாற வேண்டும்.

ஆண்ட்ராய்டு அறிதிறன்பேசிகளில் குறைந்தது 4.1 வெர்ஷன் அல்லது அதற்கு மேலாக இருக்க வேண்டும். தற்போது 12 வெர்ஷன்தான் புதிதாக பயன்பாட்டில் உள்ளது.

அதேபோல் ஐஓஎஸ் அறிதிறன் பேசிகளில் குறைந்தது 10 வெர்ஷன் அல்லது அதற்கு மேலாக இருந்தால்தான் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்த முடியும். தற்போது ஐஓஎஸ் 15 வெர்ஷன்தான் புதிதாக பயன்பாட்டில் உள்ளது.

ஜியோ போன்களில் உள்ள கேஏஐஓஎஸ் 2.5 வெர்ஷன் அல்லது அதற்கு மேல் இருந்தால்தான் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்த முடியும்.

மார்ச்  31-ஆம் தேதி முதல் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்த இயலாத பழைய அறிதிறன் பேசிகளின் விவரத்தை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் இடம்பெற்றுள்ள ஷாவ்மி, சாம்சங், எல்ஜி, மோட்டரோலா பழைய போன்களின் விவரங்கள்-

எல்ஜி ஆப்டிமஸ் எஃப்7, ஆப்டிமஸ் எல்3 II  டியூயல்,  ஆப்டிமஸ் எஃப்5, ஆப்டிமஸ் எல்5 II ,  ஆப்டிமஸ் எல்5 II  டியூயல், ஆப்டிமஸ் எல்3 II , ஆப்டிமஸ் எல்7 II  டியூயல், ஆப்டிமஸ் எல்7 II ,  ஆப்டிமஸ் எஃப்6,  எல்ஜி எனாக்ட்,  ஆப்டிமஸ் எல்4 II  டியூயல், ஆப்டிமஸ் எஃப்3, ஆப்டிமஸ் எல்4 II , ஆப்டிமஸ் எல்2 II , ஆப்டிமஸ் எஃப்3 க்யூ, மோட்டோரோலா ட்ராய்ட் தஹக்ஷ்ழ், சியோமி ஹாங்கி, ரெட்மி நோட் 4ஜி, சாம்சங் கேலக்ஸி ட்ரெண்ட் லைட்,  கேலக்ஸி எஸ்3 மினி,  கேலக்ஸி எக்ஸ்கோவர் 2, கேலக்ஸ் கோர் உள்ளிட்ட 4.1 வெர்ஷனுக்குக் கீழ் உள்ள அனைத்து அறிதிறன் பேசிகளும் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. 

இந்த அறிதிறன் பேசிகளில் வாட்ஸ்ஆப்பை மட்டும் பயன்படுத்தமுடியாது. மற்றபடி தொலைபேசி அழைப்புகளை வழக்கம்போல் பயன்படுத்தலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com