இணைய வெளியினிலே...

ஆயிரம் ஆயிரம் மன அழுத்தங்களோடு அமர்ந்திருக்கும் இந்தக் குழந்தைகளிடம் கதையோடு விளையாடி பாடலோடு  ஆடவைத்து மகிழ்ந்தது மறக்க முடியாத தருணம்...
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....

ஆயிரம் ஆயிரம் மன அழுத்தங்களோடு அமர்ந்திருக்கும் இந்தக் குழந்தை
களிடம் கதையோடு விளையாடி பாடலோடு  ஆடவைத்து மகிழ்ந்தது மறக்க முடியாத தருணம்...

மாதாமாதம் வர வேண்டும் என்ற அன்புக் கட்டளையை ஏற்று வெளியில் என்னை வந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள தனிமை தேவைப்பட்டது... 

-சரிதா ஜோ

முழங்காலில் முகம் 
புதைத்திருக்கும் என் 
முத்துப் பொண்ணே
நிமிர்ந்து பார் ! 
உன் பலவீனங்களை மட்டும்
சொல்லிச் சொல்லி
உன்னை அதள பாதாளத்தில் 
ஆழ்த்த ஆக்டோபஸ் 
கைகளுடன் ஆக்ரோச சமுதாயம்.
பூமி பந்து விளையாடத்தான்; 
விளையாட்டில் சாதனை படைப்பது 
இந்த காலம். 
தோற்றால் அனுபவம்; 
வென்றால் சாதனை 
நாம் நாமாக மட்டுமே 
வாழ்ந்து காட்டுவோம். 

-பூங்கொடி பாலமுருகன்

சுழலும் பொழுதுகள் மீளாது
உழலும் மனதும் ஆறாது
அழுதால் கடமை தீராது
தொழுதாலும் போனவை வாராது
கவலைகள் கானல் ஆகட்டும்
பகல்கள் கொஞ்சம் நீளட்டும்
உழைப்பில் உறுதி பெருகவேணும்
பிழைப்பால் வாழ்வு தொடரவேணும்
கிட்டிய பிறவி கடக்கனுமே
பட்டியல் நிறைவே ஆகாதே
ஒட்டிய வினைகள் உதிரவேணும்
மட்டில்லா அமைதி வாய்த்திடனும்

-குணா பாலா

நீயும் நானும் சேர்வதென்பது... 
கிளிகள் முத்தமிட்டு கொள்வதை போல..
குயில்கள் கொஞ்சி கொண்டிருப்பதை போல.. 
மனிதர்கள் காதலித்து 
கொண்டிருப்பதை போல...
சாதாரணமாக நிகழ்வதல்ல... 
அது மேகங்கள் உரசி மழை 
பொழிவதை போல அசாதாரணமானது... 
நீ பொழியும் மழையில் இங்கு 
அனைத்தும் குளிர்ந்து விடுவதை போல சில 
சமயம் நானும் நனைந்து விடுகிறேன்...

-கவிதா ராஜ முனிஸ்

சுட்டுரையிலிருந்து...

அம்பையினுடைய "வீட்டின் மூலையில் ஒரு சமையலறை' தொகுப்பை க்ரியா வெளியீடாக படித்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த தொகுப்பு! முகநூலில் அவரிடம் பேசியிருக்கிறேன், இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் தான் பேசவும் புகைப்படமும் எடுக்க வாய்ப்பு கிடைத்தது. அவரை பார்த்து ஒரு வணக்கம் வைத்தேன். "உங்களை பேஸ்புக்ல பார்த்து இருக்கேன்' என்றார். ஏதோ தேங்க்சு மார்க்கு! இப்போது ஒரு படத்தின் டீசரில் ஒரு நடிகை என் கணவருக்காக 50000 தோசை சுட்டுருக்கேன் என்கிறாரே அதெல்லாம் அவர் எழுதிய வெளிப்பாடு கதையின் உட்டாலக்கடி வரிகள். அம்பை அன்றே எழுதிவிட்டார்! சாகித்ய அகாடமி பெற்றதற்கு  வாழ்த்துக்கள்! 

- விஜய் மகேந்திரன்

வலைதளத்திலிருந்து...


பிளாக் என்பது ஒரு வெப்சைட் அல்லது இணையதளமாகும், இதில் உங்களுடைய கருத்துக்களை, எண்ணங்களை மற்றும் விரும்பிய எதையும் வெளிப்படுத்திக்கொள்ள முடியும்.

இதன் மூலம் உங்களுடய எழுதும் திறனையும், கற்பனை வளத்தையும் பெருக்கிக்கொள்ள முடியும். மற்றும் உங்கள் எழுத்துக்களை மற்றவர்கள் படிக்கவும் இது ஒரு நல்ல இடமாக அமையும் . நீங்கள் சிறந்த எழுத்தாளராக இது ஒரு நல்ல வழி. நிறையபேர் தன்னால் சிறப்பாக எழுத முடிந்து தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்திக் கொள்லாமல்  உள்ளனர் அவர்களுக்கெல்லாம் இது ஒரு வரப்பிரசாதம்.

சொந்தமாக நீங்கள் ஒரு பிளாக் அல்லது வலைப்பூ தொடங்க நீங்கள் எந்தவிதமான செலவும் செய்யத்தேவையில்லை. இது www.blogger.com, www.wordpress.com போன்ற தளங்களினால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது.

இதற்கு வெப்டிசைன், HTML போன்றவைகள் தெரியவேண்டும் என்று அவசியம் இல்லை.அப்புறம் என்ன நீங்களும் ஒரு வலைப்பூ தொடங்கலாமே ...

https://masdook.wordpress.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com