பயில்வோம் ராஜதந்திரம்!

இங்கிலாந்தில் உள்ள தி லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிகல் சயின்ஸ் நிறுவனம், எக்ஸிக்யூட்டிவ் எம்.எஸ்சி., இண்டர்நேஷனல் ஸ்ட்ராடஜி அண்ட் டிப்ளமஸி என்ற ஓராண்டு முதுநிலை பட்டப்படிப்பை நடத்திவருகி
பயில்வோம் ராஜதந்திரம்!

இங்கிலாந்தில் உள்ள தி லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிகல் சயின்ஸ் நிறுவனம், எக்ஸிக்யூட்டிவ் எம்.எஸ்சி., இண்டர்நேஷனல் ஸ்ட்ராடஜி அண்ட் டிப்ளமஸி என்ற ஓராண்டு முதுநிலை பட்டப்படிப்பை நடத்திவருகிறது.

தலைமைப் பண்புகளுடன் முடிவெடுக்கும் இடத்தில் உள்ளவர்களுக்காக இந்த பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த "நிர்வாக எம்.எஸ்சி., சர்வதேச உத்தி மற்றும் "ராஜதந்திரம்' என்ற படிப்பு, ராஜதந்திர பேச்சுவார்த்தை திறன்களை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பயில்வோர், மாறிவரும் உலகத்தைப் புரிந்துகொள்வதற்கான பகுப்பாய்வு திறன்களையும், அதற்குள் செயல்படுவதற்கான இந்த ஓராண்டு பாடத் திட்டம் அரசு, தனியார், அரசு சாரா துறைகளில் உள்ள தொழில் வல்லுநர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டு, உயர் பதவிகளுக்கு செல்ல வேண்டும், அதிக திறனுள்ள விவாதம் மற்றும் அறிவுசார் ஈடுபாட்டை உறுதிசெய்ய வேண்டும் என்று கருதுவோருக்காக இந்த கல்வித்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், பலதரப்பட்ட சர்வதேச மாணவர்களுடன் பயிலும் சக்திவாய்ந்த நெட்வொர்க்கிங் வாய்ப்பை இது வழங்குகிறது.

நிகழாண்டு கல்வித்திட்டம் வரும் செப்டம்பர் 2022 - இல் தொடங்குகிறது என்றாலும்,  விண்ணப்பிக்க காலக்கெடு எதுவும் இல்லை. காலம் 12 மாதங்கள். இது ஒரு முழுநேர படிப்பாகும். பணிபுரியும் வல்லுநர்கள் அனைத்து அமர்வுகளிலும் பங்கேற்க அனுமதிக்கும் வகையில், தனித்துவமான கற்பித்தல் காலண்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கல்விக் கட்டணம் 30,368 டாலர் (சுமார் ரூ. 22 லட்சம்). இந்த கல்வி நிறுவனம் இதற்கான கல்வி உதவித்தொகை எதுவும் வழங்கவில்லை. அதேசமயம், அரசு மற்றும் பிற நிறுவனங்களின் நிதி ஆதரவு உள்ளது.

இந்தப் பாடத்திட்டத்தில் சேர பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதோடு, அரசியல், வரலாறு, சர்வதேச உறவுகள் அல்லது இதே போன்ற துறைகளில் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் தொழில்முறை அனுபவம் தேவை. இதில் சேர போட்டி அதிகமாக உள்ளதால், விரைவாக விண்ணப்பிப்பது மட்டுமே பயனளிக்கும்.

மாணவர்களின் பின்னணியைப் பொருட்படுத்தாமல், மிகச் சிறந்த கல்வித் தகுதி, திறன் மற்றும் ஊக்கத்தின் அடிப்படையில் மாணவர்களைச் சேர்க்க விரும்புவதாக கல்வி நிறுவனம் தெரிவிக்கிறது. விண்ணப்பப் படிவத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு விண்ணப்பத்தையும் தனிப்பட்ட முறையில் கவனமாகப் பரிசீலிப்பதாகவும் அது கூறுகிறது.

இந்த திட்டம், தேவையான தொழில் பயிற்சிக்கான அணுகலை வழங்குவதன் மூலம் மாணவர்களின் வாழ்க்கையை முன்னேற்ற உதவும். மேலும், அவர்களின் வேலை தேடலில் உதவுவதற்கு பரந்த அளவிலான ஆதாரங்களைக் கொண்டுள்ளது.

இந்தப்  பாடத்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிகல் சயின்ஸ் நிறுவனத்தின், எக்ஸிகியூட்டிவ் எம்எஸ்சி இன்டர்நேஷனல் ஸ்ட்ராடஜி மற்றும் டிப்ளமசி திட்ட இயக்குநர் பேராசிரியர் கிறிஸ் ஆல்டன் கூறுகையில், ""இந்த எக்ஸிகியூட்டிவ் எம்எஸ்சி பாடத்திட்டம் உலகளாவிய தலைவர்களின் மூலோபாய பார்வையை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட தனித்துவமான திட்டம். மாறிவரும் உலகத்தைப் புரிந்துகொள்வதற்கான பகுப்பாய்வுக் கருவிகள் மற்றும் கொள்கைத் திறன்கள் இதில் கற்பிக்கப்படுகின்றன.

வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் அபாயங்களை எவ்வாறு மூலோபாயமாக கையாள்வது, பங்குதாரர்கள் மற்றும் எதிரிகளிடம் பேச்சுவார்த்தை மூலம் பொதுவான பிரச்னைகளை எவ்வாறு தீர்ப்பது என்பதை மாணவர்கள் கற்றுக்கொள்வார்கள். நெருக்கடி மேலாண்மை குறித்த பட்டறைகள் மற்றும் கொள்கை உருவகப்படுத்துதல்கள் மற்றும் ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மாணவர்களுக்கு நடைமுறை நுண்ணறிவுகளை வழங்கும்'' என்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com