விண்வெளி சுற்றுலா!

ஏக்சியம் விண்வெளி சுற்றுலா நிறுவனத்தின் மூலம் மூன்று பெரும் பணக்காரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.ஏக்சியம்-1 என இந்த சுற்றுலா திட்டத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.
விண்வெளி சுற்றுலா!

ஏக்சியம் விண்வெளி சுற்றுலா நிறுவனத்தின் மூலம் மூன்று பெரும் பணக்காரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

ஏக்சியம்-1 என இந்த சுற்றுலா திட்டத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இந்த ஏக்சியம் நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி "ஸ்பேக்ஸ்எக்ஸ் ஃபால்கன் 9' ராக்கெட் மூலம் ஏப்ரல் 9-ஆம் தேதி அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தனர். ராக்கெட்டிலிருந்து பிரிந்த எண்டீவர் என்ற விண்கலன் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.

இந்தப் பயணத் திட்டம் 8 நாள்களைக் கொண்டது. இதுதான் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் தனியார் விண்வெளித் திட்டமாகும்.

ஏக்சியம் விண்வெளி நிறுவனத்தின் துணைத் தலைவரும் முன்னாள் நாசா விண்வெளி வீரருமான மைக்கேல் லோபஸ் இந்தப் பயணத்தை வழிநடத்திச் சென்றுள்ளார். இவருடன் எய்டன் ஸ்டிபே, லாரி கானர், மார்க் பதி ஆகிய மூன்று பெரும் பணக்காரர்கள் முதல்முறையாக விண்வெளிக்குச் சென்றுள்ளனர். இந்த சுற்றுலாவுக்காக இவர்கள் 55 மில்லியன் டாலர் கட்டணமாக செலுத்தியுள்ளனர்.

வெறும் சுற்றுலாவாக இல்லாமல் இந்த 4 பேரும் புற்றுநோய் ஆராய்ச்சி உள்ளிட்ட 25 அறிவியல் ஆய்வுகளையும் மேற்கொள்ளவுள்ளனர்.

அடுத்த சில ஆண்டுகளில் தனக்கென தனியாக ஒரு விண்வெளி நிலையத்தை கட்டமைக்கவும் ஏக்சியம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்ததும் மைக்கேல் லோபஸ், அங்கிருந்து எடுக்கப்பட்ட பூமியின் இரவு நேர புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அத்துடன் "வாழ்க்கை குறுகியது; அதை முழுமையாக வாழுங்கள்' என ஒரு பதிவையும் போட்டிருந்தார். விண்வெளியிலிருந்து வந்த வார்த்தைகள் உண்மை தானே...!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com