வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 327

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 327


ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது மனிதவளத்துறை அமைச்சரும்,  அவருடைய மகனுமாக நாற்பது போராட்டக்காரர்கள் மீது தேர்களை ஏற்றிக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுகிறது. அவரை விசாரிக்கும் மன்னர் வீரபரகேசரி அவருக்கு தண்டனை வழங்க முடிவெடுக்கிறார். 
கணேஷ் புரொபஸரிடம்: சார்... எனக்கு மன்னரும் அமைச்சர் மகனும் உரையாடியதில் பயன்படுத்தப்பட்ட வேறு சில விசயங்களும் புரியவில்லை. கேட்கவா? 
புரொபஸர்: கேளு. கேட்க கேட்கத் தான் அறிவு வளரும். 
கணேஷ்: You have been caught red-handed என்று மன்னர் சொன்னார். Red-handed என்றால் சிவப்புக் கரங்களுடன் என்று பொருளா? அமைச்சரின் மகனின் கரங்கள் சிவப்பாக இல்லையே? 
புரொபஸர்: caught red-handed என்றால் கையும் களவுமாக என்று பொருள். ஒருவர் கொலை செய்து கையில் ரத்தத்துடன் மாட்டிக் கொள்கிறார். 
அக்காட்சியை நினைத்துப் பார். நான் கொலை பண்ணலேன்னு அவர் சொல்ல முடியாதில்ல? 
கணேஷ்: புரியுது. ஆனா அவர் கொலையுண்டவரை காப்பாற்றுவதற்காக கையில் தூக்கியபோது பட்ட ரத்தமாகவும் இருக்கலாம் இல்லியா? 
புரொபஸர்: நீ சொல்றது சினிமாக் கதை. நிஜத்தில் அப்படி நடக்கிறது இல்ல.  
கணேஷ்: அது போகட்டும் சார். 
அமைச்சரின் மகன் தான் தேர் ஏற்றி மக்களைக் கொன்றதைக் காட்டுகிற வீடியோ  doctored என்கிறார். இங்கே டாக்டர் எங்கே வந்தார்? ஒருவேளை அமைச்சர் மகன் டாக்டரா? 
புரொபஸர்: Doctor பண்ணுவதென்றால், அதாவது அச்சொல்லை வினைச்சொல்லாக பயன்படுத்தும் போது, அதற்கு இரண்டு அர்த்தங்கள் வருகின்றன. ஒன்று ஒருவருக்கு மருத்துவ உதவி பண்ணுவது. I doctored him throughout the week என்றால் வாரம் முழுக்க அவருக்கு நான் மருத்துவ உதவி செய்தேன் என்று பொருள். இன்னோர் அர்த்தம் இதற்கு நேர்மாறானது: போலியாக ஒன்றை 
மாற்றுவது, Falsify பண்ணுவது.    To change the content or appearance of (a document or picture) in order to deceive others.
உதாரணமா, நீ ஒரு சான்றிதழை, ஆவணத்தை, அறிக்கையை க்ர்ஸ்ரீற்ர்ழ் பண்ணலாம். ஒரு படத்தை போட்டோஷாப் பண்ணி அதன் தோற்றத்தை மாற்றும் போது அது doctored image ஆகிறது.  
கணேஷ்: ஆனால் டாக்டர் தொழில் என்பது ஓர் உன்னதமான சமூக சேவை. சரிதானே? 
புரொபஸர்: கிட்டத்தட்ட. சில கார்ப்பரேட் டாக்டர்கள் வணிகர்களைப் போலவே நடந்து கொள்வதைத் தவிர்த்து பார்த்தால் சரி தான். 
கணேஷ்: நான் கேட்க வந்தது, மகத்தான தொழிலை ஏன் போலியாக ஒன்றைத் 
தயாரிப்பது, பித்தலாட்டம் பண்ணுவதுடன் சேர்த்துச் சொல்லுகிறார்கள், இரண்டு முரணான காரியங்களுக்கு எப்படி ஒரே சொல் ஆங்கிலத்தில் வந்ததென்பது. 
புரொபஸர்: ஓ அதுவா? அது ரொம்ப சுவாரஸ்யமான கதை. இந்த டாக்டர் எனும் சொல்லை 13 ஆம் நூற்றாண்டில் பாதிரியார் எனும் பொருளில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.  
கணேஷ்: என்னது பாதிரியாரா?
புரொபஸர்: ஆமாம். ஏனென்றால் doctor எனும் சொல்லுக்கு பழைய ஆங்கிலத்தில் ஒரு விசயத்தை சரியாக, பொருத்தமாக விளக்குவது, நியாயப்படுத்துவது என பொருள் வருகிறது. 
அந்த காலத்தில் மக்களுக்கு அறிவு புகட்டியவர்களாக, அவர்களுக்கு சரியான பாதையைக் காட்டியவர்களாக பாதிரியார்கள் இருந்தார்கள். ஏனென்றால் பெரும்பாலான மக்கள் படிக்காதவர்களாக, ஏழைகளாக இருந்த போது, இவர்கள் மட்டுமே படித்தவர்களாக இருந்தார்கள். 
தேவவாக்கை மக்களுக்கு போதித்தார்கள். இப்போ உனக்கு ஒரு கேள்வி வருமே. நான் கூட டாக்டர் தான். ஆனால் எம்பிபிஎஸ் முடிச்சதில்ல. 
அதெப்படி தெரியுமா?

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com