ஃபேஸ்புக் மெசஞ்சர்... புதிய சேவை!

ஃபேஸ்புக் என்ற சமூக ஊடக தளம் 2004இல் தொடங்கப்பட்டிருந்தாலும்,  உலகம் முழுவதும் பரவ நான்கு ஆண்டுகளாகியது. அப்போதுதான் ஃபேஸ்புக்கில் தகவல் பரிமாற்றம் (சாட்) சேவையையும் அந்த நிறுவனம் அறிமுகம் செய்தது.
ஃபேஸ்புக் மெசஞ்சர்... புதிய சேவை!

ஃபேஸ்புக் என்ற சமூக ஊடக தளம் 2004இல் தொடங்கப்பட்டிருந்தாலும்,  உலகம் முழுவதும் பரவ நான்கு ஆண்டுகளாகியது. அப்போதுதான் ஃபேஸ்புக்கில் தகவல் பரிமாற்றம் (சாட்) சேவையையும் அந்த நிறுவனம் அறிமுகம் செய்தது. ஆனால், ஃபேஸ்புக் உள்ளே சென்றால்தான் இந்த சேவையைப் பயன்படுத்த முடியும் என்பதால் உடனடியாக பிரபலமாகவில்லை. 

ஆனால், 2009இல் அறிதிறன் பேசியில் (ஸ்மார்ட் போன்) இணையத்தைப் பயன்படுத்தி தகவல் பரிமாற்றத்துக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்ஆப் சேவை அனைவரிடம் பிரபலமாகியது. இதனால் 2014இல் ஃபேஸ்புக் நிறுவனமே வாட்ஸ்ஆப் நிறுவனத்தை வாங்கியது. தற்போது வாட்ஸ்ஆப் இல்லாத அறிதிறன் பேசி இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், ஃபேஸ்புக்கில் உள்ள சாட் சேவை மெசஞ்சராக மாற்றம் கண்டு, வாட்ஸ்ஆப்பிற்கு இணையாக புதிய சேவைகள் இணைக்கப்பட்டன. ஆடியோ, விடியோ தொலைபேசி அழைப்பு வசதிகள் மெசஞ்சரில் கடந்த ஆண்டு சேர்க்கப்பட்டன.

வாட்ஸ்ஆப்பில் உள்ள தானியங்கி தகவல் அழியும் சேவையைப் போல் மெசஞ்சரிலும் இந்த சேவை இணைக்கப்பட்டது.

இந்நிலையில், நாம் ஒருவருக்கு தானாக அழியும் வகையிலான தகவலை அனுப்பினால் அந்தத் தகவலை சம்பந்தப்பட்ட நபர் "ஸ்கீரின் ஷாட்' எடுத்தால், அது அனுப்பியவருக்கு குறுந்தகவலாக (நோட்டிபிகேஷன்) எச்சரித்திடும் புதிய சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

 இந்தச் சேவையைப் பெற மெசஞ்சரில் உள்ள "சீக்ரேட் கான்வர்ஷேசன்' உள்ளே சென்று "டிஸ்அப்பியரிங் மெசேஜஸ்' என்பதை தேர்வு செய்து விட்டால் போதும். இதன் மூலம் தகவல் பரிமாற்றம் பாதுகாப்பாகவும், அனுப்பிய தகவலில் வெளிப்படைத் தன்மையும் இருக்கும் என்று ஃபேஸ்புக் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது.

மேலும், வாட்ஸ்ஆப்பில் இருப்பதைப்போல் குறிப்பிட்ட தகவலைத் தேர்வு செய்து பதிலளிக்கும் வசதியும், மற்றவர்கள் பதிலளிப்பதற்காக பதிவு செய்து கொண்டிருப்பதைத் தெரிந்து கொள்ளவும், அனுப்பப்பட்ட தகவலை சேமித்து வைத்து கொள்ளவும், விடியோக்களை அனுப்புவதற்கு முன்பு எடிட் செய்து கொள்ளவும் பல புதிய சேவைகளை ஃபேஸ்புக் மெசஞ்சர் அறிமுகம் செய்துள்ளது, வாடிக்கையாளர்களைக் கவரும் என்றே கூறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com