வேலை... வேலை... வேலை...

பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சுப் பிரிவில் தேர்ச்சி  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி குறித்த சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். 
வேலை... வேலை... வேலை...

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை


பணியிடம்: ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் 
மொத்த காலியிடங்கள்: 66

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: தட்டச்சர் - 02

சம்பளம்: மாதம் ரூ.18,500 - ரூ.58,600 

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சுப் பிரிவில் தேர்ச்சி  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி குறித்த சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். 

பணி: டிக்கெட் விற்பனையாளர்
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.18,500 - ரூ.58,600

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: காவலர் 
காலியிடங்கள்: 24
சம்பளம்: மாதம் ரூ.15,900 - ரூ.50,400

பணி: தூர்வை
காலியிடங்கள்: 20
சம்பளம்: மாதம் ரூ.10,000 - ரூ.31,500

பணி: தூய்மைப் பணியாளர்
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31,500

தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 
வயது வரம்பு: 01.02.2022 தேதியின்படி, 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:   நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.  

விண்ணப்பிக்கும் முறை: அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் நேரில் வந்து விண்ணப்பத்தைப் பெற்றோ, அல்லது rameswaramramanathar.hrce.tn.gov.in என்ற இணையதளப் பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் 

செய்தோ பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன்  கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில், ராமேசுவரம்- 623 526, ராமநாதபுரம் மாவட்டம்.

மேலும் விவரங்கள் அறிய: https://rameswaramramanathar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற லிங்கில் சென்று பாருங்கள்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 23.02.2022


ரயில்டெல் நிறுவனத்தில் வேலை   

பணி: டெபுடி மேனேஜர் 
மொத்த காலியிடங்கள்: 52

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 

1.  டெக்னிகல்  - 24
2. எலக்ட்ரிகல்  - 01
3. சிவில்  - 01
4. மார்க்கெட்டிங் - 06
5. பைனான்ஸ்  - 04
6. லீகல்  - 01
7. டேடாபேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் - 02
8. சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேஷன் - 06
9. செக்யூரிட்டி - 04
10. நெட்வொர்க்  - 03

சம்பளம்: மாதம் ரூ.40,000 -  ரூ.1,40,000

வயது வரம்பு: 21 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், கணினி அறிவியல், எலக்ட்ரிகல், சிவில், இன்ஸ்ட்ரூமென்டேஷன் போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். மார்க்கெட்டிங் பிரிவில் எம்பிஏ, நிதியியல் பிரிவில் சிஏ,ஐசிடபுள்யுஏ முடித்தவர்கள், சட்டப்பிரிவில் முழுநேர எல்எல்பி முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

பணி: மேனேஜர்/ சீனியர் மேனேஜர் 
காலியிடங்கள்: 17
துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 

1. டேடாபேஸ் அட்மினிஸ்ட்ரேஷன்  - 04
2. சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேஷன்  - 04
3. செக்யூரிட்டி  - 04
4. ஐடி  - 02
5. டெவ்ஆப்ஸ் - 03

சம்பளம்: மாதம் ரூ.50,000 - ரூ.1,60,000

வயது வரம்பு: 23 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் எல்க்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், கணினி அறிவியல், ஐடி போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், எம்.எஸ்சி. எல்க்ட்ரானிக்ஸ், எம்சிஏ முடித்து பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் சம்பந்தப்பட்ட பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.  

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்  தேர்வு, நேர்முகத் தேர்வு, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
எழுத்துத்  தேர்வு நடைபெறும் இடம்: மும்பை, கொல்கத்தா, தில்லி 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1200. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.600 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:  www.railtelindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய: www.railtelindia.com  என்ற இணையதளத்தில் அல்லது https://www.railtelindia.com/images/careers/Final%20Vacancy%20Notice}Including%20BackLog.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.02.2022


துணை ராணுவப் படையில் வேலை

பணி: கான்ஸ்டபிள் (டிரேட்ஸ்மேன்)

மொத்த காலியிடங்கள்: 2788(ஆண்கள் - 2651, பெண்கள் - 137)

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது சம்பந்தப்பட்ட டிரேடில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 01.08.2021 தேதியின்படி 18 வயது முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும்.

உடற்தகுதி: ஆண்கள்: 167.5 செ.மீ உயரமும்,  78 முதல் 83 செ.மீ மார்பளவும், 5 கிலோ மீட்டர் தூரத்தை 24 நிமிடத்தில் ஓடி முடிக்கும் திறனும் இருக்க வேண்டும். 

பெண்கள்: 157 செ.மீ உயரமும், 1.6 கிலோ மீட்டர் தூரத்தை 8.30 நிமிடத்தில் முடிக்கும் திறனும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவ தகுதி மற்றும் தொழிற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://rectt.bsf.gov.in    என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: https://rectt.bsf.gov.in/static/bsf/pdf/Constable%20(Tradesman)%20BSF%20%60GROUP%20C%60%202021-2022.pdf என்ற லிங்கில் சென்று பாருங்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 01.03.2022

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்  நிறுவனத்தில் வேலை (என்பிசிஐஎல்) 

மொத்த காலியிடங்கள்: 91

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  
பணி:  கார்பெண்டர் - 02 
பணி: கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அண்ட் புரோகிராமிங் அசிஸ்ட்டன்ட்   - 11 
பணி: டிராப்ட்ஸ்மேன் (சிவில்/ மெக்கானிக்)    - 05
பணி: எலக்ட்ரீசியன்  - 14 
பணி:  எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்  - 06 
பணி: ஃபிட்டர்  - 21 
பணி: இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்   - 06 
பணி: லேபரட்டரி அசிஸ்ட்டன்ட் - கெமிக்கல் பிளான்ட்  - 05 
பணி: மெஷினிஸ்ட்   - 04 
பணி: மேசன்  - 03 
பணி: பிளம்பர்   - 02 
பணி: வெல்டர் - 07 
பணி:  டர்னர்   - 05 
பணி: 16 வயது முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: 8, 10, 12 - ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 
உதவித் தொகை: பயிற்சியின் போது உதவித் தொகையாக மாதம் ரூ.7,700 முதல் ரூ.8,855 வரை வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி மற்றும் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: https://apprenticeship.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் முதலில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு www.npcil.nic.in  என்ற வலைதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து,  பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அஞ்சல்மூலம் அனுப்பி வைக்க வேண்டும். 

முகவரி: Dy.Manager (HRM), HRM section, Nuclear Power Corporation of India LImited, Madras Atomic Power Station, Kalpakkam-603 102,Chengalpattu Distirct,Tamilnadu 

மேலும் விவரங்கள் அறிய: https://npcilcareers.co.in அல்லது https://npcilcareers.co.in/MainSite/default.aspx என்ற லிங்கில் சென்று கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் படித்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர  கடைசித் தேதி: 02.03.2022 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com