வேலை... வேலை... வேலை...

வேலை... வேலை... வேலை...

என்எல்சி நிறுவனத்தில்   வேலை 


மொத்த காலியிடங்கள்: 238
துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 

பணி:  ஜூனியர் என்ஜினியர் ட்ரெய்னி (மெக்கானிக்கல்)  
காலியிடங்கள்:  95

பணி: ஜூனியர் என்ஜினியர் ட்ரெய்னி (எலக்ட்ரிகல்)  
காலியிடங்கள்: 101

பணி: ஜூனியர் என்ஜினியர் ட்ரெய்னி (சிவில்) 
காலியிடங்கள்: 21

பணி: ஜூனியர் என்ஜினியர் ட்ரெய்னி (கெமிக்கல்) 
காலியிடங்கள்: 03

பணி: ஜூனியர் என்ஜினியர் ட்ரெய்னி (மைனிங்)  
காலியிடங்கள்: 18
சம்பளம்: மாதம் ரூ.31,000 - ரூ.1,00,000

தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய: https://images.assettype.com/dinamani/import/uploads/user/resources/pdf/2021/12/18/nlcjet.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.01.2022

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை 


பணி: மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜிஸ்ட் குரூப் - பி 

காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ. 35,400
தகுதி: மெடிக்கல் லேபரட்டரி சயின்சில்   இளநிலைப் பட்டம் பெற்று 2 ஆண்டு

பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 

பணி: ஜூனியர் அட்மினிஸ்ட்ரேட்டிவ் அசிஸ்டன்ட்  

காலியிடங்கள்: 08

சம்பளம்: மாதம் ரூ.19,900

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு ஆன்லைனில் நடை பெறும். இதற்கான அனுமதிச் சீட்டை 13.01.2022 அன்று இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு நடைபெறும் தேதி: 23.01.2022 

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.1200, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.1,500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: https://www.jipmer.edu.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: https://www.cipet.gov.in/job-opportunities/downloads/17-12-2021-001/Advertisement. என்ற  லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.01.2022

சிஐபிஇடி நிறுவனத்தில் வேலை 


பணி : பிசினஸ் மேனேஜர்  
சம்பளம்: மாதம் ரூ.40,000
வயது வரம்பு:  40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: புராஜெக்ட் ஃபெல்லோ 
சம்பளம்: மாதம் ரூ. 30,000
வயது வரம்பு:  35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி : பொறியியல் துறையில் மெக்கானிக்கல், பிளாஸ்டிக், உற்பத்தி, எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி பிரிவில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், ஐடி, கம்ப்யூட்டர் சயின்ஸ், பிளாஸ்டிக் டெக்னாலஜி, பிளாஸ்டிக் மோல்ட் டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் சந்தையியல், நிதியியல் பிரிவில் எம்பிஏ முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  

விண்ணப்பிக்கும் முறை : அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Incharge, Administration, CIPET:SARP-LARPM, B-25, CNI Complex, Patia, Bhubaneswar- 751024, Odisha

மேலும் விவரங்கள் அறிய: https://www.cipet.gov.in/job-opportunities/downloads/17-12-2021-001/Advertisement.jpg  என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 07.01.2022

இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை


பணி:  டெக்னீசியன் (டி- 1) 

காலியிடங்கள்: 641

வயது வரம்பு:  10.01.2022 ஆம் தேதியின்படி, 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: https://iari.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் 

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.300 செலுத்த வேண்டும்.

மேலும் கல்வித்தகுதி, தேர்வுத் திட்டம் போன்ற விவரங்கள் அறிய: https://cdn.digialm.com//per/g01/pub/726/EForms/image/ImageDocUpload/11/1118203919133825154477.pdf என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளவும் 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.01.2022 

மத்திய அரசில் வேலை
 

மொத்த காலியிடங்கள்: 341 

காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பிரிவுகள் விவரம்: 

1. இந்திய ராணுவ அகாடமி, டேராடூன் - 100 
2. இந்தியன் நேவல் அகாடமி, எஜிமலா - 22 
3. விமானப்படை அகாடமி, ஹைதராபாத் - 32 
4. அதிகாரிகளின் பயிற்சி அகாடமி, சென்னை - 170 
5. அதிகாரிகள் பயிற்சி அகாடமி, சென்னை - 17 

தகுதி : ஐஎம்ஏ மற்றும் அதிகாரிகளின் பயிற்சி அகாடமி அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள், இந்திய கடற்படை அகாடமி அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம், பொறியியல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள். ஏர் ஃபோர்ஸ் அகாடமி அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது வரம்பு :  20 வயது முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:  https://upsconline.nic.in/  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

மேலும் விவரங்கள் அறிய: https://www.upsc.gov.in/sites/default/files/Notif-CDS-I-2022-Eng-221221.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 11.01.2022

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com