கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்புப் பயிற்சிகள்!

கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் மூலம் பல்வேறு சுயவேலை வாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்புப் பயிற்சிகள்!

கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் மூலம் பல்வேறு சுயவேலை வாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.  குறைந்தது 10 நாள்கள் முதல் ஒரு மாதம் வரை இந்தப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.  பால் வளம் பெருக்குதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் பயிற்சி, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு,  மெழுகு திரி தயாரித்தல், பெண்களுக்கான ஆடை வடிவமைத்தல், அழகு கலை பயிற்சி,  இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் பயிற்சி, செல்போன் பழுது பார்க்கும் பயிற்சி, டேலி, போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 

தகுதிகள் :

குறைந்தது 8- ஆம் வகுப்பிற்கு மேல் படித்திருக்க வேண்டும்.   18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வசதிகள்:

பயிற்சியின்போது பயிற்சியாளர்களுக்கு இலவசத் தங்குமிட வசதி, உணவு மற்றும் பயிற்சிக்குத் தேவையான உபகரணங்கள், பொருட்கள் 

வழங்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்வதற்கு எவ்விதமான கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. நூலக வசதி, நவீன ஆடியோ, விடியோ கருவிகள் மூலமாகப் பயிற்சி வழங்கப்படுகிறது.

விண்ணப்பிப்பது எப்படி?

அனைத்து வங்கிகளின் மூலமாகவும், பல்வேறு வளர்ச்சி நிறுவனங்கள் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. 

பயிற்சி குறித்த விவரங்கள்:

ஊடகங்கள் மூலமாகவும், செய்தித்தாள்கள் மூலமாகவும் அறிவிக்கப்படுகிறது. பயிற்சி தேவைப்படும் நபர்கள் பயிற்சிக்கு முன்னரே விண்ணப்பம் அனுப்பி பதிவு செய்தால் அப்பயிற்சி நடைபெறும் போது தகவல் தெரிவிக்கப்பட்டு நேர்காணல் மூலமாகத் தேர்வு செய்யப்படுவார்கள். 

பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடிந்த பின்னர் நிலையத்திலிருந்து பயிற்சியாளர்களின் முன்னேற்றம் மற்றும் தொழில் தொடங்குவதிலுள்ள பிரச்னைகள் பற்றி நேரடியாக அவரவர் இடங்களுக்குச் சென்று விளக்கம் அளிக்கப்படும். கடிதங்களின் வாயிலாகவும், பயிற்சியாளர்களின் இருப்பிடங்களுக்கு அருகிலுள்ள வங்கிகளில் கூட்டம் நடத்தியும் ஆலோசனை வழங்கப்படும்.  பல்வேறு கடன் உதவி திட்டங்களின் கீழ் பயன்பெற ஆலோசனைகளும், தக்க வழிகாட்டுதலும் வழங்கப்படும். தேவைப்பட்டால், பயிற்சி பெற்றவர்களுக்குத் தேவையான அடிப்படை தொழில் நுட்ப உதவிகளும் கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் மூலம்  வழங்கப்படும். பயிற்சியாளர்கள் சுயதொழில் தொடங்கும் முயற்சியில்  எல்லாவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளிலும் துணை நிற்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com