இணைய வெளியினிலே...

கடந்து வந்த பாதை முட்களாய் இருக்கும் பட்சத்தில்... மறப்பதற்கில்லை.மலர்களாய் இருந்தால்தான்... எளிதில்  மறந்து விடுகிறார்கள்.
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....


கடந்து வந்த பாதை முட்களாய் இருக்கும் பட்சத்தில்... 
மறப்பதற்கில்லை.
மலர்களாய் இருந்தால்தான்... 
எளிதில்  மறந்து விடுகிறார்கள்.

வதிலை பிரபா


காலத்தைப் போல் இந்த
நினைவின் கால்களும் 
வலிமையானவை தான்... 
ஏழு மலை, 
ஏழு கடல் தாண்டியும் 
நம்மோடு சேர்ந்தே
ஓடி வருகின்றன.  

சங்கரி சிவகணேசன்


இருக்கும் பாதையிலேயே 
நடப்பது
சுகமாக இருக்கலாம்.
ஆனால், 
புதிய பாதைகளை... 
கல்லும் முள்ளும் 
தாண்டத் தயங்காதவர்களே 
உருவாக்குகிறார்கள்.

உமா மோகன்


இரவு நேரத்தில்
குளக்கரையில்
இறங்குகிறேன்...
ஒவ்வொரு படியிலும்
ஒரு நிலா.

கூடல் தாரிக்

சுட்டுரையிலிருந்து...


வாழ்க்கை ஒரு வட்டம் தான்... 
அந்த வட்டத்தை 
நீங்க வரைந்திட வேண்டாம். 
எனக்கான வட்டம்... நானே 
வரையறை செய்து கொள்வேன். 

லதா கார்த்திகேசு

நாலு காசு சம்பாரிச்சிட்டா 
பேச்சுல திமிர் வர்றதுக்கு பேரு தான் தற்பெருமை. 
எவ்வளவு சம்பாதித்தாலும் 
பஞ்சப்பாட்டு பாடுபவர்கள் பக்குவவாதிகள்.

சிதறல்கள்

அனுபவம் இல்லாமல்  வாழ்க்கை இல்லை. 
அனுபவிக்கவில்லை என்றால் அது வாழ்க்கையே இல்லை. 

முத்தமிழ் அருள்


நிஜத்துலேயும் 
நிழல்லேயும் 
ஒரே மாதிரி நடிக்க 
தனி திறமை வேணும்.

மச்சு


வலைதளத்திலிருந்து...

வயதானவர்கள் மெதுவாக செயல்படுவதன் காரணம், அவர்கள் முதுமை அடைந்ததால் மூளை மழுங்கியுள்ளது என்றும் அதனால் அவர்களால் இளைஞர்கள் போல் விரைவாக ஒன்றைப் புரிந்துகொள்ள இயலாது என்றும் நம்மில் பலர்,  ஏன் எல்லோருமே நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் உண்மையான காரணம் அது இல்லையாம்.  
நமது மூளை ஒரு கணினியில் உள்ள வன் தட்டு (ஹார்ட் டிரைவ்) போன்றது என்றும், எப்படி கணினியில் உள்ள வன் தட்டு தகவல்கள் முழுதும் நிரம்பிய போது மெதுவாகச் செயல்படுகிறதோ,  அதுபோல் முதுமை அடைந்தவர்களின் மூளை அதிகப்படியான தகவல்களைக் கொண்டிருப்பதால், திடீரென ஒரு தகவலை அல்லது ஒரு சொற்றொடரை சொன்னதும் அவற்றை ஏற்கெனவே சேமித்து வைக்கப்பட்டிருக்கின்ற ஏராளமான தகவல்களிலிருந்து புராசஸ் செய்ய வேண்டி இருப்பதால் அது மெதுவாக இயங்குகிறதாம். அதனால்தான் முதியவர்கள் மெதுவாகச் செயல்படுகிறார்கள் என அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். 
 கணினிகளின் தகவல் தளம் பல்கிப் பெருகும்போது, அதிலுள்ள சொற்களைத் தேட கணினிகள் அதிக நேரம் எடுத்துக் கொள்வது நமக்கு ஒன்றும் வியப்பை அளிப்பதில்லை. இந்த அடிப்படைத் தகவல்தான் வயது முதிர்ந்தவர்கள் ஏன் இளைஞர்களை விட மெதுவாகச் செயல்படுகிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ள உதவியதாம். 
முதியவர்களின் மூளை சேமித்து வைக்கப்பட்டுள்ள அதிகப்படித் தகவல்களை புராசெஸ்  செய்ய நேரம் எடுத்துக் கொள்வதால், அது இளைஞர்களைவிட மெதுவாகச் செயல்படுகிறது என்றும் சில சமயம் அது மறதிக்கும் வழி வகுக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

https://puthur-vns.blogspot.com/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com