இணைய வெளியினிலே...

வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில், நம் காலம் நொறுங்கிக் கிடக்கிறது.
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....

சமாதானம்
.......
பீரங்கி நுனியில் அமர்ந்திருக்கிறது,
ஒரு வண்ணத்துப்பூச்சி.
சுற்றும் முற்றும் பார்க்கிறது...
ஒரு துளி தேன் வைத்திருக்கும் பூவுக்காக.

ஜெயதேவன்

இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் வருவார்கள் என்று
முன்னமே தெரியாது.
தெரிந்திருந்தால்,
கைப்பிடி அரிசி கூடுதலாகப் போட்டு இருக்கலாம்.
பரவாயில்லை...
காஃபி குடிக்கும் நேரத்தில்
இரண்டு விசிலடித்து,
சோறாக்கித் தந்துவிடும்தானே...
அன்பு?

கனகா பாலன்

முகத்தில் குத்தினால் முகத்தில் காயம் படும்.
கையில் குத்தினால் கையில் காயம் படும்.
முதுகில் குத்தினால் மட்டும்...
மனதில் காயம் படுதே,ஏன்?

பெ. கருணாகரன்

வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில், நம் காலம் நொறுங்கிக் கிடக்கிறது.

ஆசு சுப்ரமணியன்

சுட்டுரையிலிருந்து...


இரண்டாவது நபருக்குத்தெரிந்தால்தான் அது ரகசியம்.
நமக்கு மட்டுமேதெரியுமெனில்...
அது மனசாட்சி.

ச ப் பா ணி


உன் வேலைகளை
முதலில் நேர்த்தியாய்
செய்கிறாயெனில்...
நிச்சயம் நீ,
அத்தனையிலும்
நேர்த்தியாகவே நடப்பாய்.

நல்ல நண்பன்

உன்னை தூசி என்றுநினைப்பவர்களிடம்
நீ தூசியாகவே இருந்து விடு.
அவர்கள் கண்ணில் படும்போதெல்லாம்கண்கலங்குவார்கள்.
ஏன் தூசியென்று நினைத்தோம் என்று.

சுதா ஷண்முகம்


உங்கள் புகழ், உங்களுக்குப் போதையைத்தருமென்றால்...
உங்கள் மனம் மனநல மருத்துவத்திற்கு போகப் போகிறதென்று அர்த்தம்.

நேசம்


வலைதளத்திலிருந்து...


என்னை மிகவும் அசத்தியவர்களில் ஒருவர் ஆப்பிளின் ஸ்டீவ் ஜாப்ஸ்.

2005 - இல் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவர் நிகழ்த்திய உரையைக் கேட்ட பின் நான் அன்று பதிந்த பதிவிலிருந்து சில வரிகள்.

""உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதில் நம்பிக்கை வைத்து செய்யுங்கள். பிடித்தது எது என்று இன்னும் பிடிபடவில்லையென்றால், அது என்ன என்று தேடுங்கள். எனக்கு என்ன வேண்டும் என்று எனக்கே தெரியவில்லை என்று கிடைத்ததை வைத்துக் கொண்டு செட்டில் ஆகிவிடாதீர்கள். உள் மனசு சொல்வதைக் கேட்கப் பழகுங்கள். அதன்படி நடக்க முயலுங்கள்.

சென்ற வருடம் எனக்கு கேன்ஸர் என்று முடிவான பின் என் வாழ்நாள் சில மாதங்களே என்றனர். அப்போதுதான் என் மனசில் நான் இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் பாக்கி நிறைய இருப்பது புரிந்தது. வாழ்க்கையில் நம் எல்லாருக்கும் பொதுவான, நிச்சயமான ஒன்று இறப்பு. இது எப்போது வேண்டு
மானாலும் நிகழலாம் என்று புரிந்து கொண்டால், நம்மில் இருக்கும் பாதி குழப்பங்கள் தீர்ந்துவிடும். நாளை இறந்து போய்விட்டால் என்ற கேள்வியை உங்கள் முன் வைத்துக் கொண்டால், பல சாதனைகளை உங்களையறியாமலேயே செய்துவிடுவீர்கள்.

உங்களுக்கு என்று பாதை வகுத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு என்று வாழ்க்கை குறிப்பிட்ட அளவுதான். அதையும் பிறர் சொல்படி வாழ்ந்து வீணாக்காதீர்கள். புள்ளிகள் வைப்பது முக்கியம். அவற்றை எப்படி இணைப்பது என்று குழம்பாதீர்கள். புள்ளிகள் வைத்துவிட்டால் கோடுகள் தானே வந்து சேரும்'' ஹ்ம்ம்..... என்ன ஒரு பிரமாதமான மனிதர்!

https://aruna52.blogspot.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com