Enable Javscript for better performance
வெல்ல அப்பம் செய்யும் முறை- Dinamani

சுடச்சுட

    

    சிலர் கேதார கௌரி விரதத்துக்கு வெல்லமும், அரிசி மாவும் கலந்து அப்பம் செய்து இறைவனுக்கு வழிபடுவார்கள்.

    அந்த வகையில், வெல்ல அப்பம் செய்யும் முறையைப் பார்க்கலாம்

    அரிசி மாவு - 1 கப்

    வெல்லம் - அரை கப்

    பழுத்த வாழைப்பழம் - 1

    தேங்காய் - சிறிய துண்டு

    ஏலக்காய் - 1

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    அரை கப் தண்ணீரில் வெல்லத்தைப் போட்டு நன்கு கரைத்து வடிகட்டு வைத்துக் கொள்ளவும்.

    வாழைப் பழத்தை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்கு மசித்து வைக்கவும்.

    தேங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஏலக்காயை சர்க்கரையோடு சேர்த்து பொடியாக்கிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, மசித்த வாழைப்பழம், தேங்காய் துண்டுகள், ஏலக்காய் தூள் சேர்த்து அதில் வெல்ல நீரை விட்டு கரைக்கவும். இட்லி மாவு பதத்துக்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் கரைத்த மாவை ஒரு கரண்டியில் எடுத்து ஊற்றவும். அப்பம் ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி மறு பக்கம் வேகும் வரை வைத்து சிவந்ததும் எடுக்கவும்.

    இதே முறையில் எண்ணெயில் ஊற்றாமல், பணியாரக் குழியில் வைத்து வேக வைத்தும் எடுக்கலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai