Enable Javscript for better performance
மாதவிடாய் பிரச்னைகள் தீர தனுராசனம்- Dinamani

சுடச்சுட

    
    dhanurasanam

    பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகள் தீர எளிதான தனுராசனம் உதவுகிறது.

    ஆசனங்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உடலுறுப்புகளை பலப்படுத்த உதவுகிறது. இந்த தனுராசனம் வயிற்றுப் பகுதிக்கு பலத்தை அளிக்க வல்லது.

    அதாவது, முதலில் தரையில் விரிப்பை விரித்து அதில் வயிறு தரையில் படும்படி படுத்துக் கொள்ள வேண்டும். கால்களுக்கு அருகே கைகள் இருக்கும்படி வைக்கவும்.

    பின்னர் கால்களை முடிந்த வரையில் மெதுவாக தூக்க வேண்டும். கைகளை பின்னோக்கி வைத்துக் கொண்டு முகத்தை மெதுவாக தூக்கி அப்படியே நெஞ்சையும் தூக்கி வயிறு மட்டும் தரையில் படும் நிலையில், கைகளால் கால்களை பிடித்துக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் இயல்பான சுவாசத்தில் சில நொடிகள் இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு மெதுவாகத் திரும்பவும். இதுதான் தனுராசனம். 

    தினமும் 3 அல்லது 5 முறை இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்.

    இந்த தனுராசனத்தால் குடல் சுத்தமாகும். வாய் துர்நாற்றம் போகும். முதுகெலும்பு பலமாகும். மாதவிடாய் பிரச்னை சரியாகும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai