Enable Javscript for better performance
லட்சியம் ஐ.ஏ.எஸ்.!- Dinamani

சுடச்சுட

    

    லட்சியம் ஐ.ஏ.எஸ்.!

    By - ஒய்.டேவிட் ராஜா  |   Published on : 25th January 2016 05:53 PM  |   அ+அ அ-   |    |  

    yellamma1

     

    எல்லம்மா. சாதிக்கத் துடிக்கும் பெங்களூரு இளம் பெண். குடும்ப சூழ்நிலை காரணமாக பூக்கள் அலங்காரம் செய்யும் ஒருவருக்கு இவருடைய 18வது வயதிலேயே  திருமணம் செய்து வைக்கப்பட்டார். அமைதியாக சென்ற வாழ்வில் புயல் வீசியது. கணவரை இழந்தார்; தனிமரமானார். வாழ்வின் சோகத்தின் விளிம்பில் சென்ற இவர் தன்னுடைய இரண்டரை வயது குழந்தைக்காக வாழ்கையில் எதிர்நீச்சல் போட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

    இதற்காக அவர் சோர்ந்து போகவில்லை, தன் சொந்தங்களிடம் கையேந்தி நிற்கவில்லை. மாறாக  வாழ்வில் நல்ல நிலையை அடைய அவரிடம் ஒரு யோசனை தோன்றியது. ஆட்டோ ஓட்டி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தன் குடும்பத்தை நடத்தலாம் என்று. பெங்களூரில் நல்ல வருவாய் ஈட்ட சிறந்ததாக இந்த ஆட்டோ ஓட்டும் தொழில் உள்ளது. எனவே இந்த திட்டத்தை செயல்படுத்த நினைத்த எல்லம்மா, தன் மைத்துனரிடம் ஆட்டோ ஓட்ட கற்றுக்கொண்டார். சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு வசதியில்லை. எனவே வாடகைக்கு ஆட்டோ கிடைக்குமா என்று பலரிடம் போய் கேட்டார். ஆனால் இவர் பெண் என்பதாலும், இந்த தொழிலுக்கு புதியவர்

    என்பதாலும், யாவரும் வாடகைக்கு ஆட்டோ தர மறுத்தனர்.

    கடைசியாக இவரது தன்னம்பிக்கையைப் பார்த்த ஒரு ஆட்டோ மெக்கானிக், இவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ130 என வாடகை பேசி ஆட்டோ கொடுத்தார். எல்லம்மாவுக்கு ஒரே சந்தோஷம். நாட்கள் ஆக ஆக இவர் மிகவும் திறமையாக பெங்களூரு சாலைகளில் நேர்த்தியாக ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நடத்தினார்.

    இவ்வாறு தினமும் ஆட்டோ ஓட்டியே குடும்பத்தை நடத்துவது என்பது இயலாத காரியம். ஏனென்றால், தன்னுடைய குழந்தையை படிக்கவைக்க வேண்டும். அதுவும் நல்ல பள்ளியில் படிக்க வைக்க வேண்டும். அதற்கு இந்த வருமானம் போதாது. அதேபோல் தானும் படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என எண்ணினார்.

    எனவே தனக்கு கிடைக்கும் வருவாயை வைத்து பி.யூ.சி., படிக்கவும் அதே நேரத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படிக்கவும்  முடிவு செய்தார். அதை உடனே செயல்படுத்தும் விதமாக ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தேவையான புத்தகங்கள் தன்னுடைய ஆட்டோவில் எப்போதும் இருக்கும். அதேபோல பி.யூ.சி. படிப்பும் சென்றுகொண்டிருக்கிறது. தினசரி பத்திரிகைகள் அனைத்தும் இவரது ஆட்டோவில் இருக்கும். பொது அறிவுக்கான அனைத்தையும் கற்றுக்கொண்டிருக்கிறார்.

    இவருக்கு தினமும்  ரூ.700 முதல் 800 வரை வருமானம் கிடைக்கிறது. இதில் பாதி வாடகை மற்றும் பெட்ரோலுக்கு போக மீதி இவருக்கு கிடைக்கிறது. தன்னுடைய இலட்சியம் நிறைவேற வேண்டி இவர் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஆட்டோ ஓட்டுகிறார்.

    இவரது ஆட்டோவில் செல்பவர்கள், ஆட்டோவில் உள்ள புத்தகங்களைப் பார்த்துவிட்டு என்னவென்று விசாரிக்கிறார்கள். அப்போது இவரின் இலட்சிங்களைக் கேட்டு தங்களால் முடிந்த உதவிகளையும் செய்துவிட்டு வாழ்த்திச் செல்கிறார்கள். மேலும் மீட்டருக்கு மேல் பணமும் கொடுக்கிறார்களாம். இது இவரது வெற்றிப் பயணத்தின் உந்துகோலாக அமைகிறது.

     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp