சுடச்சுட

  

  ரசிகர்களைச் சிரிக்க வைப்பதில் இருக்கிறது திருப்தி : நந்தினி

  By - ஸ்ரீ  |   Published on : 23rd June 2016 04:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   

  "சரவணன் மீனாட்சி' தொடரில் மைனா கேரக்டரில் வந்து கலக்கிக் கொண்டிருக்கும்  நந்தினிக்கு ரசிகர்கள் அதிகம். 

  nandhini3.jpg 

  சமீபத்தில் வெளியாகியிருக்கும் "ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் சினிமா ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்திருக்கும் இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

  அவரைச் சந்தித்தோம்:

  மீடியாவுக்குள் வந்த கதை?

  மதுரை சிம்மக்கல் தான் பூர்வீகம். அப்பா, அம்மா ரெண்டு பேரும் ஒரு ஜவுளிக் கடையில் வேலை பாக்குறாங்க. நார்மல் ஃபேமிலி. பி.பி.ஏ படிச்சிருக்கேன். மீடியாவுக்குள்ள வந்தது என்றால் மதுரையில் லோக்கல் சேனலில் கொஞ்சநாள் வேலை பார்த்துக் கொண்டு இருந்தேன். அப்போது அங்கே வந்த இயக்குநர் பாண்டிராஜ் சார் மூலமா "வம்சம்' படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு சின்னத்திரை தொடர்களில்  சின்னசின்ன கேரக்டர்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. இந்நிலையில்தான் "சரவணன் மீனாட்சி' மைனா கேரக்டர். இப்போ நந்தினியைவிட மைனா பிரபலமாகிவிட்டாள்.

  உங்களுக்கு பிடித்த கேரக்டர்?

  காமெடி கேரக்டர்தான் என் முதல் சாய்ஸ். காமெடி கேரக்டரில் வந்து ரசிகர்களை சிரிக்க வைப்பதில் ஒரு திருப்தி இருக்கிறது. கோவை சரளாவோட நடிப்பு ரொம்ப பிடிக்கும். சினிமாவுல அவங்களைப் போன்று காமெடி நடிகையாக வர வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. அதே சமயத்துல எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் என்னுடைய பெஸ்ட் கொடுக்க முடியும்.

   "கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியில் இருந்து விலகியது ஏன்?

   நான் விஜய்டிவிக்கு தெரிவிக்காம இன்னொரு சேனல் நிகழ்ச்சியில கலந்துக்கிட்டேன். அதனால கொஞ்சம் வெளியேற வேண்டியதாப் போச்சு.  நான் சொல்லாம போனது என்னோட தப்புதான்.

   திருமண வாழ்த்துகள்! உங்கள் கணவரைப் பற்றி சொல்லுங்க?

  கார்த்தி செலிபிரிட்டி ஜிம் டிரைனராக இருக்கிறார். நான் போன ஜென்மத்துல செஞ்ச புண்ணியம் தான் கார்த்தி எனக்குக் கிடைச்சுருக்காருன்னு சொல்வேன். அவ்ளோ என் மேல பாசம். எங்க திருமணத்தை இப்ப நினைச்சாலும் கனவு மாதிரி இருக்கு. முதலில் அவர் வீட்டு பெரியவங்களோட  என்னை பெண் பார்க்க வந்தார். அப்போ எனக்கு காதல் திருமணம் தான் செய்து கொள்ளவேண்டும் என்று ஆசை.  அதனால இவர பிடிக்கலன்னு சொல்லிட்டேன். அதன்பிறகு அவரை கொஞ்சம் கொஞ்சமா புரிந்து கொள்கிற மாதிரியான வாய்ப்பு கிடைத்தது. காதலிக்க ஆரம்பிச்ச நான்கு நாளில் அவர் வீட்டில் பேசிட்டாரு. உடனே ஓகே சொல்லிட்டாங்க. அடுத்து பெரிய கேப் எடுத்துக்காம உடனே நிச்சயதார்த்தம், கல்யாணம்.  கல்யாணம் முடிந்த நான்கு நாட்களில் அவரு வேலை விஷயமா துபாய் கிளம்பிட்டாரு. அவர் ஊரில் இருந்து திரும்பியதும் ரிசெப்ஷன் வைக்க பிளான் பண்ணியிருக்கோம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai