வானில் ஒரு சாதனை..!

"சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு ..' என்று கேட்பவர்கள் வானில் பறந்து சாதனை நிகழ்த்தி வரும் ஆரோஹி பண்டிட், கீதர் மிஸ்கிட்டா.
வானில் ஒரு சாதனை..!

"சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு ..' என்று கேட்பவர்கள் வானில் பறந்து சாதனை நிகழ்த்தி வரும் ஆரோஹி பண்டிட், கீதர் மிஸ்கிட்டா. இருபதுகளில் நிற்கும் இந்த இளம் விமானிகள் தொண்ணூறு நாட்களில் சுமார் இருபது நாடுகளை வலம் வரப் போகிறார்கள். இவர்களது பயணம் பாட்டியாலா விமான தளத்திலிருந்து சிறகு விரித்துள்ளது. வானிலிருந்து இயற்கை அழகை ரசிக்கும் இவர்கள் வானில் தொண்ணூறு நாட்கள் சிறிய விமானத்தில் பயணம் செய்து முதல் இந்தியப் பெண்மணிகள் என்ற பெருமையைப் பெறுவார்கள்.
 பல நாடுகளில் இவர்களின் விமானம் இறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களின் வான் பயணத்திற்கு "மஹி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 மஹி என்றால் வட மொழியில் புவி அல்லது பூமி என்று பொருளாம். புவியைப் பார்த்தவாறே பறப்பதால் "மஹி' என்று பெயர் வைத்தோம் என்கிறார் ஆரோஹி.
 "நாங்கள் பயணிக்கும் இந்தக்குட்டி விமானம் ஒரு மணிநேரத்தில் 215 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் உள்ளது. விமானத்தில் வெறும் அறுபது லிட்டர் பெட்ரோல்தான் நிரப்ப முடியும். அதனால், அதிக பட்சம் வானில் நான்கரை மணி நேரம் மட்டுமே பறக்க முடியும். இரண்டு பேர் மட்டுமே அமரக் கூடிய விமானம் இது. திடீரென்று அசம்பாவிதம் நடந்தால் விமானத்திலிருந்து குதித்து உயிர் தப்ப பாராசூட் வசதி உண்டு. நாங்கள் மூன்று கண்டங்களில் இருபத்துமூன்று நாடுகளை தொண்ணூறு நாட்களில் சுற்றுவோம். அந்த நாடுகளில் தென்கிழக்கு ஆசிய நாடுகளான ஜப்பான், ரஷ்யா, கனடா, அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்தும் அடங்கும்.
 "இந்தியாவில் குட்டி விளையாட்டு ரக விமானத்தை ஓட்டுவதற்கான அனுமதியை முதன்முதலாக பெற்றிருப்பது நாங்கள்தான். நாங்கள் மும்பை பிளையிங் கிளப்பில் விமானம் ஓட்டுவதில் முதல் நிலை பட்டப்படிப்பில் தேர்வு பெற்றுள்ளோம். இந்த வான் வழி பயணத்திற்கான வேலைகள் சென்ற ஏப்ரல் மாதம் தொடங்கினோம். எங்களது பயணத்திற்கு, "பேட்டி படாவோ பேட்டி பச்சாவோ' திட்டத்தின் கீழ் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை ஆதரவும் கிடைத்துள்ளது'' என்கிறார் ஆரோஹி.
 - பனுஜா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com