ஒன்பது வயதில் பாடலாசிரியர்!

யூடியூபில் சங்க இலக்கியப் பாடல்களை தவறுகள் இல்லாமல் திருத்தமாகச் சொல்வதுடன் பொருளும் கூறி வலை தளங்களில் தமிழ் ஆர்வலர்களை அசத்தி வருபவர் அனன்யா. இலங்கையைச் சேர்ந்தவர்.
ஒன்பது வயதில் பாடலாசிரியர்!

யூடியூபில் சங்க இலக்கியப் பாடல்களை தவறுகள் இல்லாமல் திருத்தமாகச் சொல்வதுடன் பொருளும் கூறி வலை தளங்களில் தமிழ் ஆர்வலர்களை அசத்தி வருபவர் அனன்யா. இலங்கையைச் சேர்ந்தவர்.
 ஒன்பதே வயதான இவர், ஞானக்குழந்தை என்றுதான் சொல்ல வேண்டும். டிவி சானல் பலவற்றிற்கு பேட்டிகள், பல தமிழ் இலக்கியங்கள் குறித்து பேட்டிகள் வழங்கி வரும் ஆச்சரியக் குறியானவர். அனன்யா வாழ்வது லண்டனில். ஆனால் தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியராக அறிமுகமாகிறார் என்பதுதான் இவர் குறித்த புதிய செய்தி.
 "திருமணம் என்னும் நிக்காஹ்' படத்தை இயக்கிய அனிஷ் "பகைவனுக்கு அருள்வாய்' என்ற படத்தை இரண்டாவதாக இயக்குகிறார். அனிஷின் இயக்கத்தில், உலகப் பிரசித்தி பெற்ற நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் "மேக்பெத்' என்ற நாடகம் முதன் முறையாக தமிழில் திரைப் படமாக உருவாகிறது. "மேக்பெத்' கதையை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைத்திருப்பவரும் அனிஷ் தான். படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். "96' படத்தின் ஒளிப்பதிவாளர் ஷண்முக சுந்தரம், இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர்.
 இந்தப் படத்தின் ஹை லைட் , அனன்யா பாடலாசிரியையாக அறிமுகம் செய்யப்படுவதுதான். சின்ன வயதில் சங்க இலக்கியங்கள் குறித்த அனன்யாவுக்கு இருக்கும் அறிவு அனைவரையும் வியக்கவைக்கிறது. அதன்காரணமாக அவருக்கு தமிழ்நாடு, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து ,அமெரிக்கா, வளைகுடா நாடுகளில் பிரபலம்.
 - ரய்யான்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com