பருக்கள் மறைய எளிய வழிகள்!

ஹார்மோன் சுரப்பு, எண்ணெய்ப் பசை அதிகரிப்பு, கிருமி தொற்று போன்றவையே முகப்பருக்கள் ஏற்பட முக்கிய காரணமாகின்றன.
பருக்கள் மறைய எளிய வழிகள்!

ஹார்மோன் சுரப்பு, எண்ணெய்ப் பசை அதிகரிப்பு, கிருமி தொற்று போன்றவையே முகப்பருக்கள் ஏற்பட முக்கிய காரணமாகின்றன. எனவே முகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிக எண்ணெய்ப் பசை உள்ள சருமம் கொண்டவர்கள் அவ்வப்போது முகத்தை சோப்பு மற்றும் நீரால் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முகப்பருக்களை அடிக்கடி கையால் தொட்டுப் பார்க்க கூடாது. நகத்தால் கிள்ளவும் கூடாது. இதனால் கிருமித்தொற்று பரவி புதிய முகப்பருக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

• துத்தி இலையை அரைத்துப் பருக்கள் மீது தடவிவரப் பருக்கள் மறையும்.

• நன்னாரி வேர் கஷாயத்தால் பருக்கள் தீரும்.

• வெட்டி வேர் நூறு கிராம், சந்தனத் தூள் 25 கிராம் ஆகிய இரண்டையும் தூள் செய்து நீர்விட்டுக் கலந்து கட்டிகள் மீது தடவிவர, முகப் பருக்கள் மாறும்.

• பாசிப் பருப்புப் பொடியுடன் நெல்லிக்காய் தூள் கலந்து சோப்புக்குப் பதில், தினசரிக் குளிக்கப் பயன்படுத்தினால் பருக்கள் விரைவில் மறைந்து விடும். 

• ஜாதிக்காய், சந்தனம், மிளகு ஆகிய மூன்றையும் அரைத்துப் பற்று போட, பரு மறையும். 

• வேப்பிலை பருக்களுக்கு சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. வேப்பம் கொழுந்தை அரைத்து முகப்பருக்களில் பூசி 15 நிமிடங்கள் ஊறவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். 

• கடலைமாவு, கஸ்தூரி மஞ்சள் தூள், சோற்றுக்கற்றாழை மூன்றையும் கலந்து பருக்கள் மீது தடவி வர பருக்கள் குணமாகும்.

• படிகாரம் கலந்த நீரில் அடிக்கடி முகத்தை கழுவலாம் இது கிருமி தொற்றை கட்டுப்படுத்தி முகப்பருக்கள் வருவதை தவிர்க்கும். 
-என். சண்முகம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com