சுடச்சுட

  
  a7

  • அடைக்கு மாவு அரைக்கும்போது அரிசி, பருப்புடன் இரண்டு வேகவைத்த உருளைக்கிழங்குப் போட்டு அரைத்தால் அடைமிகவும் ருசியாக இருக்கும்.

  • கடலை எண்ணெய்யை நான்கு அல்லது ஐந்து சொட்டுவிட்டால் துவரம்பருப்பு சீக்கிரமே வெந்துவிடும்.

  • பீட்ரூட் சூப் செய்யும்போது தக்காளியையும் வேக வைத்து மிக்ஸியில் அரைத்து சூப் செய்தால் சுவையாக இருக்கும்.

  • மோர்க் குழம்பில் மிளகாயை அரைத்துக் கலப்பதோடு மோர் மிளகாயை வறுத்துப் போட்டுவிட்டால் செம டேஸ்ட்டாக இருக்கும்.

  • எலுமிச்சைத் தோலால் தேய்த்தால் மரச்சாமான்கள் பளபளப்பாகும். 

  • உருளைக்கிழங்கு வேகவைத்த நீரில் வெள்ளிப் பாத்திரங்களை அலம்பினால் பளபள வென்றிருக்கும்.

  • மோர் அதிகமாகப் புளித்துப் போய் விடாமல் இருக்க அதில் ஒரு காய்ந்த மிளகாயைப் போட்டு வைக்கவும்.

  • ஒரு நாளைக்கு ஒருவருக்கு 40 கிராம் நார்ச்சத்து தேவை. அதனால் தினம் 200 கிராம் கொண்டைக்கடலை சுண்டல், அல்லது 200 கிராம் கீரை அல்லது 200 கிராம் காய்கறி உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  • பாகற்காயில் உள்ள இரண்டு வேதிப் பொருட்களுக்கு ரத்தத்திலுள்ள சர்க்கரையைக் குறைக்கும் குணமுண்டு. இன்சுலின் ஊசி மருத்திலுள்ள வேதிப் பொருட்கள் பாகற்காயில் உள்ளது.

  • மைதா மாவில் செய்யப்படும் பேக்கரி உணவு வகைகளில் சேர்க்கப்படும் ரசாயனப் பொருட்கள் கணையத்தை பாதிக்கும். இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்களை சிறிது சிறிதாக அழித்து நீரழிவு நோய்க்கு வழி வகுக்கும்.
  - எச். சீதாலட்சுமி, நெ.இராமன், சண்முக சுப்ரமணியன்


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai