சுடச்சுட

  
  mm1

  டெசி தாமஸ்க்கு மற்றொரு சிறப்புப் பெயர் உண்டு. அது "அக்னி புத்ரி'. ஆமாம் அக்னி ஏவுகணைகளை வெற்றிகரமாக ஏவியதில் முக்கிய பங்கு வகித்தவர். 1988-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்ததிலிருந்தே அக்னி ஏவுகணைப்பிரிவில் பணிபுரிந்து வந்தாலும் "அக்னி 4'-ஐ தலைமை ஏற்று 2011-இல் வெற்றிகரமாக விண்ணில் செலுத்த முன் நின்றவர். 
  அதுமட்டுமல்ல "அக்னி -5' இது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைக்கும் தலைமை ஏற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவிய பெருமை இவருக்கு உண்டு. இதனால் இவருக்கு அக்னி புத்ரி என்ற செல்லப் பெயரை வைத்து விட்டனர். ஏவுகணை பிரிவில், ஒரு பெண்மணி, தலைமை நிர்வாகியாக இருந்தது உலகளவில், முதன்முதலில் இவர் மட்டுமே. இப்போது இவருக்கு மற்றொரு பெருமையும் சேர்ந்துள்ளது. 
  இதுநாள்வரை ஹைதராபாத்தில் பணிபுரிந்தவர், இனி பெங்களூருவில் தனது பணியைத் தொடருகிறார். எப்படி? ஈதஈஞ நிறுவனத்தில் விண் பயணம் பற்றிய அறிவியல் சார்ந்த 10 நிறுவனங்களின் கூட்டு தலைமை டைரக்டர் ஜெனரலாக பதவி ஏற்றுள்ளார். டெசிக்கு சொந்த ஊர் கேரளாவின் ஆலப்புழா. 
  - ராஜிராதா

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai