சுடச்சுட

  
  mm9

  தேசிய காங்கிரஸ் கூட்டம் 1922-ஆம் ஆண்டு காகிநாடாவில் நடைபெற்றது. அதையொட்டி பொருட்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் வாசலில் துர்கா கேட் கீப்பராக நின்றாள். டிக்கெட் இல்லாமல் யாரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்பது சிறுமிக்கு இட்ட உத்தரவு.
   ஜவஹர்லால் நேரு அப்போது பொருட்காட்சியைப் பார்க்க வந்தார். வாசலில் நின்றிருந்த சிறுமி, அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. "இரண்டணா கொடுத்து டிக்கெட் வாங்குங்கள்'' என்றாள் சிறுமி. அந்த நேரம் பணமில்லாமல் நேரு விழிக்க, தூரத்தில் இருந்த சில தொண்டர்கள் ஓடி வந்தார்கள். சிறுமியைப் பார்த்து "அவர் யார் தெரியுமா?'' என்று மிரட்டினர்.
   "ஓ.. தெரியுமே' என்றாள். "அவரை நிறுத்தலாமா?'' என்று கேட்டனர். "நீங்கள்தானே யாரையும் டிக்கெட் இல்லாமல் அனுப்பக் கூடாது என்றீர்கள்.. அதன்படியே செய்தேன்'' என்றார்.
   உடனே நேரு, "அந்தச் சிறுமியின் செயல் சரியானதுதான் நாமே சில விதிகளை உண்டாக்கிவிட்டு, அதை மீறக்கூடாது, இந்தச் சிறுமியைப் போன்ற பெண்கள்தான் தற்போது நம் நாட்டிற்குத் தேவை'' என்றார். அந்தச் சிறுமிதான், சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இடம்பெற்ற துர்காபாய் தேஷ்முக்.
   - டி.எஸ்.பாலு

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai