சல்மான்கான் அறிமுகப்படுத்தும் நூதனின் பேத்தி பிரநூதன்

நித்தின் காக்கர் இயக்கத்தில் சல்மான்கான் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்த இணையதளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட புதுமுகங்களை பரிசீலனை செய்தபோது,
சல்மான்கான் அறிமுகப்படுத்தும் நூதனின் பேத்தி பிரநூதன்

நித்தின் காக்கர் இயக்கத்தில் சல்மான்கான் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்த இணையதளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட புதுமுகங்களை பரிசீலனை செய்தபோது, மறைந்த முன்னாள் நடிகை நூதனின் பேத்தியும், நடிகர் மோனிஷ் பெஹல் மகளுமான பிரநூதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சட்டம் பயின்று மும்பையில் பிரபல சட்ட நிறுவனமொன்றில் பணிபுரியும் பிரநூதனுக்கு, சினிமாவில் நடிக்க வேண்டுமென்பது முக்கிய கனவாக இருந்ததால், கதையை கேட்டதும் ஒப்புதல் அளித்துள்ளார். ஏற்கெனவே, சல்மான்கான், பிரநூதனின் தந்தை மோனிஷுடன் "மெய்னே பியார் க்யா' (1989) என்ற படத்தில் சேர்ந்து நடித்திருந்ததால், பிரநூதனை அறிமுகப்படுத்தும் பொறுப்பு சல்மானுக்கு சுலபமாக கிடைத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com