இரும்புப் பெண்மணி

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து நான்கு படங்கள் தயாராகின்றன என்ற செய்திகள் வந்தாலும், யார் "ஜெ'யாக நடிப்பார்கள் என்ற செய்தி வெளிவரவில்லை. 
இரும்புப் பெண்மணி

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து நான்கு படங்கள் தயாராகின்றன என்ற செய்திகள் வந்தாலும், யார் "ஜெ'யாக நடிப்பார்கள் என்ற செய்தி வெளிவரவில்லை. 
இயக்குநர் மிஸ்க்கினின் உதவியாளராக இருந்த பிரியதர்ஷினி "ஜெ' வாழ்க்கையை "இரும்புப் பெண்மணி' (THE IRON  LADY) என்ற பெயரில் இயக்குகிறார். பிரியதர்ஷினி நடிகை நித்யா மேனனை "ஜெ'யாக நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார். ஒப்பனை மூலம், "ஜெ'யின் சாயலை நித்யா மேனனிடம் கொண்டு வர முடியும் என்று நம்புகிறார். சசிகலாவாக சரத்குமார் மகள் வரலட்சுமியை ஒப்பந்தம் செய்யவும் பிரியதர்ஷினி முடிவு செய்துள்ளார். வரலக்ஷ்மி படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றிருப்பதால் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லையாம். எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பவர் குறித்து இன்னமும் தீர்மானமாகவில்லை.
- பனுஜா 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com