வளர்ந்து வரும் இந்திய அழகு சந்தை!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் முக்கியத்துவம் கொடுப்பது அழகுக்கு தான்.
வளர்ந்து வரும் இந்திய அழகு சந்தை!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் முக்கியத்துவம் கொடுப்பது அழகுக்கு தான். இந்த அழகுக்கே அழகு சேர்க்கும் வகையில் இன்றைய தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டன. இளம் வயதில் மிருதுவாகவும், பொலிவுடனும், பளபளப்புடனும் தோன்றும் சருமம் வயது ஏற ஏற சுருக்கமுற்று, பொலிவிழந்து, உண்மையான நிறமிழந்து காணப்படும். இதனை தடுக்கவும், சரிசெய்யவும் உலக சந்தையில் முக அறுவை சிகிச்சை மற்றும் அழகு சந்தைகளுக்கான தொழில்நுட்பங்கள் பெருக்கி வருகின்றன. சர்வதேச அளவில் இந்த சந்தையின் வளர்ச்சி பெருகி வரும் நிலையில்,

இந்தியாவில் இதன் வளர்ச்சி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சியைக் காட்டிலும் இரட்டிப்பு வேகத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது. என்பது ஆச்சர்யமளித்துள்ளது.  சமீபத்திய ஆய்வின்படி, 2017-18-ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் அழகு சந்தை மதிப்பு ரூ.80,370 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதன் வளர்ச்சி 7% முதல் 17% வரை உயரலாம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.   இது குறித்து  அழகுக்கலை நிபுணர்கள் சிலரின் கருத்துக்களை பார்ப்போம்:

""அழகு மற்றும் தோல் தொடர்பான சிகிச்சைகள் 30, 40 வயது சார்ந்தோரை மட்டுமல்லாது 50 வயதிற்கு மேற்பட்டவர்களிடமும் பிரபலமடைய காரணம், தொழில்நுட்ப வளர்ச்சி, மிகக்குறைந்த பக்க விளைவுகளுடன் கூடிய சிறந்த பலன், குறைந்த செலவு மற்றும் விழிப்புணர்வு ஆகியவைதான்'' என்று சர் கங்கா ராம் மருத்துவமனையைச் சேர்ந்த தோல் சிகிச்சை நிபுணரான டாக்டர். ரோகித் பத்ரா தெரிவித்துள்ளார்.

""ஜுவடர்ம்  (ஒமயஉஈஉதங), வால்யுமைசர்ஸ் (யஞகமஙஐநஉதந) மற்றும் போடாக்ஸ் (ஆஞபஞல)  ஆகியவை அழகுக்கலையில் துளையிட்டு உட்செலுத்தும் ஃபில்லர்ஸ் எனப்படும் ஒருவகை அழகுக்கலை. அதேசமயம் லேசர் சாதனங்களின் முறையில் துளையின்றி ஏற்படுத்தும் ஃபில்லர்ஸ்கள் மூலமும் சரும சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், இதுபோன்ற சிகிச்சைகளை தகுதியான தோல் சிகிச்சை நிபுணர், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார்''  அப்போலோ மருத்துவமனையின் தோல் சிகிச்சை மூத்த மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஜி. ரவிச்சந்திரன்.  

இதுஒருபுறமிருக்க, மற்றொரு புறம், பெண்களிடையே சமீபத்தில் பிரபலமாகிவருவது, மாசு, மருவற்ற, கண்ணாடி போன்ற சரும அழகை(கிளாஸ் ஸ்கின் காம்ப்ளக்ஷன் ) பெறுவது. இத்தகைய கண்ணாடி போன்ற சருமத்தை பெறுவதற்கு சந்தையில் நிறைய மாய்சுரைஸர்கள், முகப்பூச்சுகள், பளிச்சிடும் சீரம் ஆகியவை உள்ளன.

அதுபோன்று  முகத்தில் உள்ள சிதைந்த செல்களை நீக்கி ஆரோக்யமான, இளமையான தோற்றத்தை பெற "கெமிகல் பீல்' என்ற முறை உள்ளது. இந்த முறையில், முகத்தில் சிதைந்த செல்களின்  மீது ரசாயனத்தைப் பூசி மெதுவாக மசாஜ் செய்து வர சிதைந்த செல்கள் நீங்கி சருமம் புத்துணர்ச்சி பெறும்.

நமது முக வடிவமைப்பை எவ்வித அறுவை சிகிச்சையும் இன்றி அழகாக மாற்றும் முறை தற்போது பிரபலமடைந்து வருகிறது. இந்த முறை மிகவும் பாதுகாப்பானதும் கூட .  ùத்ரட் லிப்டிங்க், நூலை வைத்து முகத் தாடையின் மேலும் கீழும் தொடர்ந்து மசாஜ் செய்யும்  இந்த முறையில்  உடனடியாக பலன் கிடைக்குமாம். மேலும், இந்த முறையில் ஓர் ஆண்டுக்கும் மேல் சிகிச்சையின் பலன்  நீடிக்கும்.

அல்ட்ரா கதிர்கள் மற்றும் ரேடியோ கதிர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி நமது தோலில் உள்ள கொலாஜென், ஃபைபர்ஸ், டெர்மிஸ் ஆகியவற்றை பலப்படுத்தினால் இளமையான, மிருதுவான பளப்பான சருமத்தை பெறலாம்.
தெர்மா ஃபில்லர்ஸ்: முக சுருக்கம் நீங்க, மிருதுவான சருமத்தை பெறுவதற்காக மெல்லிய திசுக்கள் அடங்கிய ஊசிகள் முகத்தினுள் செலுத்தப்படும். இதன் மூலம் நாம் விரும்பியவாறு நமது முக அமைப்பை பெறலாம். அழகான சதுர வடிவிலான சிலை போன்ற முக வடிவமைப்பையும் பெறலாம். உதடுகளை மேலும் அழகாக காட்ட, கண்ணைச் சுற்றியுள்ள கருவளையங்களை போக்க இம்முறை பயனாக இருக்கும்.

தோல் மெருகேற்றும் ஊசிகள்: தோல் பளபளப்பாக இருக்க இயற்கையாகவே உடலில் பல புரதங்கள் சுரக்கும். அத்தகைய புரதங்களை ஊசிகள் மூலமாக செயற்கையாக  செலுத்தும்போது  முகம் இழந்த அழகைப் பெற்று பொலிவுடன் காணப்படும்.  

லேசர் டோனிங்: சருமம் வயது கூடும்போது பொலிவை இழந்து காணப்படும். கருமை நிற புள்ளிகள் ஆங்காங்கே தோன்றி இருக்கும். லேசர் டோனிங் சிகிச்சை மூலமாக சருமத்தின் இழந்த பொலிவை மீண்டும் பெறலாம். இந்த முறை சருமத்தில் உடனடி மாற்றத்தைத் தரும்.

தெர்மா ரோலிங்: வயது ஏற ஏற சிலருக்கு கன்னத்தில் குழிகள், தழும்புகள், ஆங்காங்கே கருமை நிற படலங்கள் தோன்ற ஆரம்பிக்கும். இந்த தெர்மா ரோலிங் முறையில், அக்குபஞ்சர் அளவிலான ஊசிகள் கொண்ட  ஒரு கருவி முகத்தில் தேய்த்து உருட்டப்படும். அதன் மூலம்  சருமத்தில் உள்ள இறந்து போன செல்கள், மூடிய சருமத் துளைகள் ஆகியவை மறைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும். அதன் பின்னர் மற்ற சிகிச்சையை மேற்கொள்ளும் போது அதன் முடிவுகள் பிரகாசமானதாக இருக்கும்.

லேசர் லிப்ட்: இந்த முறையில் லேசர் கதிர்கள் முகத்தில் செலுத்தப்படும்.  அந்த கதிர்கள் முகத்தில் ஊடுருவி முகத்தில் உள்ள கொழுப்புகளை கரைத்து சருமத்தை இறுக்கமடைய செய்யும். இது அழகான முக வடிவமைப்பை பெற்று தரும்.

கொழுப்பு மாற்று சிகிச்சை: பெண்களின் முகத்தை மேலும் அழகாக்குவது அவர்களின் கன்னங்கள். அது அழகாக இருந்தால் முகத்துக்கே தனிஅழகுதான். ஆனால் சிலருக்கு கன்னம் ஒட்டிப் போயிருக்கும். அவ்வாறு ஒட்டிய கன்னம் கொண்டவர்களுக்கு கொழுப்பு  மாற்று சிகிச்சை பயனுள்ளதாக அமையும். இந்த சிகிச்சையில் உடலின் வேறு பாகங்களில் இருந்து கொழுப்பு திசுக்கள் எடுக்கப்பட்டு முகத்தினுள் ஊசி மூலமாக செலுத்தப்படும். இதன் மூலம் அழகான கன்னங்களைப் பெற முடியும்.  

என்னதான் நாம் விதவிதமான சிகிச்சைகளை மேற்கொண்டாலும் நமது முக அழகை உணவே தீர்மானிக்கும். நாம் உண்ணும் உணவே உடல் ஆரோக்கியத்தையும், சரும ஆரோக்கியத்தையும் தரும். 

இயற்கையின் வரம் தேங்காய் எண்ணெய்: தோலின் உள்ளே இருக்கும் எபிடெர்மல் திசுவை பலப்படுத்த தேங்காய் எண்ணெய் உதவியாக இருக்கும். சருமத்தில் உள்ள இறந்து போன செல்களை நீக்கும். மேலும் வெயிலினால் சருமத்தில் ஏற்பட்ட மாறுபாட்டை நீக்கும் இயற்கை மாய்சுரைஸர் ஆக இருக்கும்.

தேன்: சருமத்தில் ஏற்பட்ட  பிளவுகள், தழும்புகள், முகப்பருவினால் உண்டான காயங்கள், அலர்ஜி, ஆகியவற்றை குணப்படுத்துவதற்கு இது உதவியாக இருக்கும்.

வெண்ணெய்: வயதானவர்களுக்கு ஏற்படும் கரும்புள்ளிகள், சரும எரிச்சல், சூரிய ஒளியினால் பாதிக்கப்பட்ட தோல் ஆகியவற்றை குணப்படுத்தும் அதீத மாய்சுரைஸராக வெண்ணெய் உள்ளது.

கற்றாழை: உலர்ந்த சருமம், தோல் உரிதல், சொரியாசீஸ், முகப்பரு ஆகியவற்றை குணப்படுத்த கற்றாழை உதவுகிறது.

தண்ணீர்: ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 8-10 டம்ளர் தண்ணீர் பருகுவது மிகவும் முக்கியம்.  டீ, காபி அதிகமாக பருகுவதை தவிர்க்க வேண்டும்.  இவையெல்லாம் அழகை இயற்கையாகவே பாதுகாத்திடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com