சுடச்சுட

  

   ஆடியில் விதைக்க வேண்டிய காய்கறி, கீரை வகைகள்

  By  நா.நாச்சாள்  |   Published on : 07th August 2019 11:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  MAADI-THOTTAM1

  தோட்டம் அமைக்கலாம் வாங்க...
  சென்ற இதழ்களில் காய்கறிகள் கீரைகள் போன்ற வீட்டுக்குத் தேவையான விதைகளை எவ்வாறு விதைப்பது என்று பார்த்தோம்.
   இந்த வாரம், ஆடி மாதத்தில் என்னென்ன விதமான காய்கறிகளையும் கீரை வகைகளையும் விதைக்கலாம் என்றும், அவற்றின் பூக்கும் காலம், அறுவடை காலம் போன்றவற்றையும் பற்றி தெரிந்துகொள்ளலாம். மேலும் என்னென்ன செடிகளை எந்தெந்த காலத்தில் விதைக்கலாம் என்றும் பார்ப்போம்.
   பொதுவாக விதைக்க வேண்டிய செடிகளுக்கு தேவையான விதைகளைப் பட்டத்துக்குத் தகுந்தார் போல் தயார் செய்து கொள்ளலாம். அதுவே நாற்று விட்டு நடவு செய்ய வேண்டிய செடிகளான கத்திரி, தக்காளி, மிளகாய், சின்ன வெங்காயம் போன்றவற்றிற்கு ஒரு மாதத்திற்கு முன்பே நாற்றங்காலில் விதைத்து வைத்திருக்க வேண்டும்.
   விதைத்து 30 நாட்கள் கழித்து தக்காளியையும் 40-45 நாட்களுக்குப்பின் மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் போன்ற செடிகளையும் நாற்றங்காலில் இருந்து வீட்டு தோட்டத்திற்கு தயார் செய்து வைத்திருக்கும் தொட்டிகளில் நடவு செய்ய வேண்டும். அதற்கு ஏற்ப நாற்றுகளை முன்பே தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
   எந்தெந்த பட்டத்தில் அல்லது மாதத்தில் என்னென்ன காய்கறி செடிகளை வளர்க்கலாம் என்று பார்ப்போம். ஆடிப்பட்டத்தில் வெண்டை, பறங்கிக்காய், புடலை, பீர்க்கன், சுரை, பாகல், பூசணி, வெள்ளரி, கொத்தவரை, தட்டைபயறு, பீன்ஸ், அவரை, முருங்கை, முள்ளங்கி, மிளகாய் போன்ற பயிர்களை விதைக்கலாம். எந்தெந்த காய்களை எந்தெந்த மாதத்தில் விதைக்கலாம், எவ்வளவு காலத்தில் பூத்து, அறுவடைக்கு தயாராகும் என்பதனையும் அதன் வளர்ச்சியையும் எளிதாக அட்டவணை மூலம் தெரிந்து கொள்வோம். (அட்டவணைப் பார்க்கவும்)
   உதாரணத்திற்கு வெண்டையை ஆடிப்பட்டத்தில் விதைக்க, விதைத்த நாற்பத்தைந்து நாட்களில் முதல் அறுவடையாக வெண்டைக்காயினை பறிக்கலாம். அதன் பின் தட்பவெப்பநிலை, ஊட்டமான மண், அவ்வப்பொழுது மண்புழு, இயற்கை வளர்ச்சி ஊக்கிகளை அளிக்க அன்றாடம் நூறு நாட்களுக்கு காய்களை அறுவடைசெய்துகொள்ளலாம்.
   இயற்கை முறையில் செடி வளர்ச்சிக்கும் சிறந்த காய்ப்பு மற்றும் மகசூலுக்கு இரண்டு விஷயங்கள் அவசியம்.. ஒன்று மண்புழுக்கள் (மண்புழு உரம்) மற்றொன்று மூடாக்கு.
   அடுத்துவரும் இதழ்களில் இவற்றைப்பற்றியும் செடிவளர்ச்சிக்கு இவற்றின் அவசியத்தைப்பற்றியும் தெரிந்து கொள்வோம்.


   - தொடரும்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai