சமையல்! சமையல்!

இத்தாலியன் பாஸ்தா, கடாய் பனீர், ஸ்வீட் கார்ன் கொசம்பரி, வெஜ் மன்சூரியன் உருண்டை 

இத்தாலியன் பாஸ்தா

தேவையானவை: பாஸ்தா – 2 கிண்ணம், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - 2 தேக்கரண்டி, பூண்டு -2 பல், இஞ்சி -1துண்டு, வெங்காயம் -2, தக்காளி - 4, கேரட் - அரை கிண்ணம், குடை மிளகாய் - கால் கிண்ணம், கரம் மசாலா - அரைத் தேக்கரண்டி, மிளகாய்த்தூள் - 1தேக்கரண்டி, கொத்துமல்லி - சிறிதளவு, 
செய்முறை: முதலில் ஒரு வாணலியில் தண்ணீர்விட்டு கொதித்ததும் உப்பு சேர்த்து அதனுடன் பாஸ்தா சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும். பிறகு, வடிகட்டி எடுத்து வைத்து கொள்ளவும். பின்னர், வாணலியில் எண்ணெய் விட்டு அதில் நசுக்கிய பூண்டு, இஞ்சியுடன், வெங்காயமும் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். பிறகு கேரட் மற்றும் குடைமிளகாய் சேர்த்து மூடி நன்றாக வேகவைத்து கொள்ளவும். இவையனைத்தும் நன்றாக வதங்கியதும் அதனுடன் கரம் மசாலா, மிளகாய்த்தூள் சேர்த்து அதனுடன் நாம் வேகவைத்த பாஸ்தா சேர்த்து கிளறி 5 நிமிடம் வேக வைத்து கொத்துமல்லி தூவி இறக்கினால் சுவையான பாஸ்தா தயார். 

கடாய் பனீர்

தேவையானவை: பனீர் - 200 கிராம், வெங்காயம் - 1 (நறுக்கியது), தக்காளி - 2 (நறுக்கியது), மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி, மல்லித் தூள் - 1தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.
தாளிப்பதற்கு: எண்ணெய் - தேவைக்கேற்ப, சோம்பு - 1தேக்கரண்டி, கிராம்பு - 4, பட்டை - 1, பூண்டு - 4 பற்கள், பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)
செய்முறை: முதலில் பனீரை துண்டுகளாக்கி, சுடுநீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு 5 நிமிடம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பின் அதில் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து, உப்பு தூவி 1 நிமிடம் கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க விட வேண்டும். பிறகு அதில் பனீர் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, 2 நிமிடம் வேக வைத்து அடுப்பில் இருந்து இறக்கினால், கடாய் பனீர் ரெடி.

ஸ்வீட் கார்ன் கொசம்பரி

தேவையானவை: ஸ்விட் கார்ன் (மக்காச்சோளம்) - 1 கிண்ணம், எண்ணெய் - தாளிப்பதற்கு, கடுகு - 1 தேக்கரண்டி, கொத்துமல்லி இலை
(நறுக்கியது) - ஒரு கைப்பிடியளவு, பச்சை மிளகாய்(நறுக்கியது) - 1 மாதுளை முத்துகள் - கால் கிண்ணம், லெமன் ஜூஸ் - 1 தேக்கரண்டி, தேங்காய்- அரை கிண்ணம், உப்பு - சுவைக்கேற்ப, மிளகு (நுனுக்கியது) - 1தேக்கரண்டி,
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பின்னர், ஸ்வீட் கார்ன், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும். நுனுக்கிய மிளகுத்தூள், லெமன் சாறு தூவி எல்லாவற்றையும் நன்றாக கிளறி ஒரு கிண்ணத்தில் மாற்றி கொள்ளவும். இன்னும் கொஞ்சம் லெமன் சாறு சேர்த்து கொத்துமல்லி இலைகளை தூவி இறக்கவும். சுவையான ஸ்வீட் கார்ன் கொசம்பரி ரெடி 

வெஜ் மன்சூரியன் உருண்டை

தேவையானவை: தேங்காய் - அரை கிண்ணம், முட்டைக் கோஸ், குடைமிளகாய் தலா - கால் கிண்ணம், வெங்காயத் தாள்- 2 மேஜைக்கரண்டி, மிளகு தூள்- அரை தேக்கரண்டி, மைதா - 2 மேஜைக்கரண்டி, சோள மாவு -2 மேஜைக்கரண்டி, உப்பு - தேவைக்கேற்ப, சாஸுக்கு: வெங்காயம் - 2 மேஜைக்கரண்டி, செலரி -1 மேஜைக்கரண்டி, இஞ்சி, பூண்டு -1 மேஜைக் கரண்டி, பச்சை மிளகாய் - 2, சோள மாவு - 1 மேஜைக்கரண்டி, சோயா சாஸ் -1/2 மேஜைக்கரண்டி, வினிகர் - 1/2 மேஜைக்கரண்டி, வெஜி டபிள் ஸ்டாக் - 3/4 கப், மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, சர்க்கரை - தேவையான அளவு, வெங் காயத் தாள் - சிறிது
செய்முறை: கேரட், முட்டைக் கோஸ், குடை மிளகாய், வெங்காய தாள், மிளகு, மைதா, சோள மாவு மற்றும் உப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி 10-15 நிமிடங்கள் வைக்கவும். காய்கள் ஈரப்பதமாக இருப்பதால் நீர் சேர்க்க தேவை இல்லை. அனைத்தையும் சிறிய பந்துகளாக உருட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் உருட்டி வைத்திருக்கும் பந்துகளை போடவும். பொன்னிறமாக பொரித்துக் கொள்ளவும் . பின்பு அவற்றை எடுத்து டிஷ்யூ பேப்பரில் வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத் தாள், இஞ்சி, பூண்டு, செலரி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும். மிதமான தீயில் வைத்து பொரிக்கவும். வெஜிடபிள் ஸ்டாக் அல்லது நீர் சேர்க்கவும். மிளகுத் தூள் மற்றும் சோயா சாஸ் சேர்த்து நன்கு கலக்கவும். 2 நிமிடங்கள் வேக வைக்கவும். பின்பு மெதுவாக சோள மாவு சேர்க்கவும். நன்கு கிளறி வேக வைக்கவும்.பின்பு வினிகர், உப்பு, சர்க்கரை மற்றும் வெஜிடபிள் பந்துகளையும் சேர்த்து லேசாக கிளறி 1 நிமிடம் சிம்மில் வைக்கவும். வெஜ் மஞ்சூரியன் ரெடி
- எஸ்.சரோஜா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com