சுடச்சுட

  
  deepika

  டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பதினொரு ஆண்டுகளாக பணியாற்றி வந்த "பத்மஸ்ரீ' விருது பெற்ற இந்திய முன்னணி வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, அந்த நிறுவனத்திலிருந்து விலகி புனேவில் உள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார். 2008-ஆம் ஆண்டு டாடா ஆர்ச்செரி அகாதெமியில் சேர்ந்து பல விருதுகளைப் பெற்ற தீபிகா, 2012-ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க செல்வதற்கு முன் டாடா நிறுவனத்தில் விளையாட்டுத் துறை நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். தன் தனிப்பட்ட வாழ்க்கையில் வருங்கால கணவர் அதனு தாஸுடன் சேர்ந்து வாழ வேண்டுமென்பதற்காகவே தற்போது பணியிடத்தை மாற்றியிருப்பதாக தீபிகா கூறியுள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai