Enable Javscript for better performance
தெலுங்கில் அறிமுகமாகும் வர்ஷா போலம்மா- Dinamani

சுடச்சுட

    
    vb

    தமிழில் விஜய் சேதுபதியுடன் "96' என்ற படத்திலும், விஜய்யுடன் "பிகில்' படத்திலும் நடித்துள்ள குடகுப் பெண் வர்ஷா போலம்மா தற்போது தெலுங்கில் "சூசி சூதங்கனே' என்ற படத்தில் டிரம்ஸ் வாசிக்கும் கலைஞராக அறிமுகமாகிறார். "கல்லூரி நாடகங்களில் நடிக்க ஆசைப்பட்டபோது, என்னை தேர்வு செய்ய மறுத்தது உறுத்தலாகவே இருந்தது. என் சிநேகிதி முகநூல் மூலம் சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற என் ஆசையை வெளிப்படுத்தியபோது, உடனடியாக தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. "பிகில்' படத்தில் ஆசார பிராமண பெண்ணாக நடித்த என் நடிப்பை பார்த்த இயக்குநர் வினோத், "சூசி சூதங்கனே' படத்தில் இசைக்குழுவில் டிரம்மராக நடிக்க வாய்ப்பளித்துள்ளார். இப்படத்தில் குண்டூர் வட்டார தெலுங்கு பேசி நடிப்பது புது அனுபவம்'' என்கிறார் வர்ஷா போலம்மா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai