கைவைத்தியம்!

விரலி மஞ்சளின் நுனியை நெருப்பில் வாட்டி, வெளிவரும் புகையினை நுகருவதன் மூலம் மூக்கடைப்பிலிருந்து விடுபடலாம். 
கைவைத்தியம்!

விரலி மஞ்சளின் நுனியை நெருப்பில் வாட்டி, வெளிவரும் புகையினை நுகருவதன் மூலம் மூக்கடைப்பிலிருந்து விடுபடலாம். 
• தலா 100கிராம் சுக்கு மற்றும் வெல்லத்தினை நன்கு பொடித்து, ஒன்றாகக் கலந்து சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து, தினம் ஒரு உருண்டை சாப்பிட்டால் வாயு, அஜீரணம் போன்ற தொல்லைகள் கட்டுப்படும்.
• தேங்காய்ப் பாலுடன் சிறிதளவு சுக்குத்தூள் கலந்து அருந்திவர வாய்ப்புண் மற்றும் நாக்கில் உள்ள புண் குணமாகும்.
• தோல் சீவிய இஞ்சித் துண்டுகளை தேனில் ஊறவைத்து, காலை வெறும் வயிற்றில் தினம் ஒன்று சாப்பிட்டு வர பித்தம் தணியும்.
• அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சமஅளவு எடுத்து இளஞ்சூட்டில் வறுத்து பொடிக்கவும். அரை ஸ்பூன் பொடியுடன் சிறிது நெய் கலந்து மூன்று வேளை உண்டு வந்தால் வறட்டு இருமல் நீங்கும்.
• உப்பு, கடுக்காய், சீரகம் மூன்றையும் பொடித்து, அப்பொடியில் பல்துலக்கி வர ஈறுகளில் ரத்தம் கசிவது நிற்கும்.
• உடலில் ஏற்படும் அரிப்பிற்கு, குப்பைமேனி இலையோடு சமமான அளவு மஞ்சள் சேர்த்து அரைத்து பூசிவர விரைவில் குணமடையலாம்.
• நெல்லிக்காய் பொடியுடன், தோல் நீக்காத பயத்தம்பருப்பு மாவை கலந்து உடலில் தேய்த்து குளித்து வர நாளடைவில் சருமம் பளபளக்கும். தலைக்கு தேய்த்து குளித்தால் முடி கொட்டுவது நின்று, செழித்து வளரும்.
• பத்துமிளகுடன் உப்பு சேர்த்து அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தாங்க முடியாத தலைவலி சட்டென பறந்துவிடும்.
- சு.பொன்மணிஸ்ரீராமன், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com