பிரிட்டிஷ் தூதரகத்தின் ஒருநாள் ஆணையர்!

ஒரு ஆங்கில நாளிதழில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி இந்திய அளவில் உங்களைப் பொருத்தவரைப் பாலினம் என்பது என்ன? மற்றும் உங்களுடைய முன்மாதிரி யார்?" என்ற
பிரிட்டிஷ் தூதரகத்தின் ஒருநாள் ஆணையர்!

ஒரு ஆங்கில நாளிதழில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி இந்திய அளவில் உங்களைப் பொருத்தவரைப் பாலினம் என்பது என்ன? மற்றும் உங்களுடைய முன்மாதிரி யார்?" என்ற தலைப்பில் சமீபத்தில் குறும்படப் போட்டி ஒன்று நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற ஏழு பேரில் ஒருவர் தீபா கிரிஸ்டினா ஜெயராஜ். சென்னையை சேர்ந்த இவர் சட்டக் கல்லூரி மாணவி.
தனது ரோல் மாடல் என்று தர்மபுரியைச் சேர்ந்த மாதேஸ்வரி என்ற 9 வயது சிறுமியை குறிப்பிட்டிருந்தார். மாதேஸ்வரி என்ற சிறுமி, தனது இரண்டாவது தங்கையை, தனது பெற்றோர், பெண் குழந்தை என்பதால் சிசுக்கொலை செய்ய திட்டமிட்டபோது, காவல்துறையையும் பொதுமக்களையும் நாடி, அந்த கொலையைத் தடுத்து நிறுத்திய வீரப்பெண். தீபாவின் இந்த குறும்படம் முதல் தகுதிக்கு தேர்வானது. அதற்கு பரிசாக பிரிட்டிஷ் துணைத்தூதராக ஒரு நாள் பொறுப்பேற்றுக் கொள்ளும் வாய்ப்பை தீபா பெற்றார். இது குறித்து தீபா கூறுகையில்:
"நான் சென்னை தரமணியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகக் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவி. அப்பா பால் பிரதாப் ஜெயராஜ். அம்மா ஷீபா ஜெயராஜ் இருவருமே தொழிற்துறை ஆலோசகர்கள். 
பிரிட்டிஷ் துணை உயர் ஆணையர் ஆலிவர் பால்ஹச்செட்டின் வீட்டில் காலை சிற்றுண்டியுடன் அன்றைய தினம் தொடங்கியது. பின்னர், பிரிட்டிஷ் ஆணையத்தில் உள்ள தலைமை பிரிவுகளையெல்லாம் பார்வையிட்டேன். அவர்களுடைய பணி குறித்து எனக்குச் சுருக்கமாக விளக்கப்பட்டது. " பின்னர் ரேடியோவில் எனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டேன். பின்னர் இங்கிலாந்து துணைத் தூதரகத்துடன் தொடர்பு கொண்ட ZIFO RND  
SOLUTIONS என்ற கம்பெனிக்கு சென்று தூதரகம் சம்பந்தமான செயல்பாடுகளில் பங்கு கொண்டேன். அன்றைய மாலையோடு எனது பணி நிறைவுபெற்றது. இந்த பிரிட்டிஷ் துணை உயர் ஆணையத்துக்குத் தலைவராக ஒரு பெண் பதவி வகிப்பது இதுவே முதல்முறை" என்று பாராட்டினார் ஆலிவர் பால்ஹச்செட். இது என் வாழ்வில் மறக்கமுடியாதது. 
நான் இதுவரை பல போட்டிகளில் பரிசு பெற்றுள்ளேன். ஆனால் அவை எல்லாவற்றையும் விட இந்த பரிசு எனக்கு பெருமை வாய்ந்தது. வருங்காலத்தில் சட்டப்படிப்பில் பி.எச்.டி முடித்து சட்டக் கல்லூரியில் பேராசிரியர் ஆக வேண்டும் என்பதே ஆசை -கனவு'' என்றார். 
கடந்த ஆண்டு உலக அளவில் சட்டக் கல்லூரி மாணவர்களுக்காக நொய்டாவில் நடைபெற்ற கருத்தரங்கில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டுள்ளார் தீபா. மேலும், இந்தியாவின் தலைசிறந்த சட்டக் கல்லூரிகளில் ஒன்றான சிம்பியாசிஸ் கல்லூரியில் சென்ற வருடம் தேசிய அளவில் நடந்த தீர்ப்பு எழுதும் போட்டியில் முதல் பரிசை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தீபாவிற்கு, கவிதை, கட்டுரை எழுதுவதிலும் ஆர்வம் உண்டாம். 
-ஸ்ரீ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com