மேட்சிங் மேட்சிங்

பார்டர் வைத்த ப்ளையின் புடவைகளை குண்டான உடலமைப்பு உள்ளவர்கள் உடுத்தினால் கொஞ்சம் ஒலியாக தெரிவார்கள்.
மேட்சிங் மேட்சிங்

பார்டர் வைத்த ப்ளையின் புடவைகளை குண்டான உடலமைப்பு உள்ளவர்கள் உடுத்தினால் கொஞ்சம் ஒலியாக தெரிவார்கள்.
* மொட மொடவென்று நிற்கும் புடவைகள் நிச்சயம் ஒல்லியான பெண்களுக்குத்தான். இருந்தாலும் குண்டானவர்களும் உடுத்த ஆசைப்பட்டால் சின்ன சின்னப் பூக்கள் ஆங்காங்கே இருக்கும் மாதிரியான புடவைகளை தேர்ந்தெடுக்கலாம். பெரிய பூக்கள் நிறைந்த டிசைன்களும் மேலும் அகலமாகக் காட்டும். 
• குள்ளமாகவும் குண்டாகவும் இருப்பவர்கள் மெல்லிய வளைவு வளைவான கோடுள்ள புடவைகள் உடுத்தினால் ஒல்லியாகவும் உயரமாகவும் தெரிவார்கள். நீங்கள் அணியும் காலணி சற்று உயரம் உள்ளதாக அணிந்து கொண்டால் மேலும் உயரமாக தெரியலாம்.
• நிறைய ப்ரிண்ட் உள்ள புடவைகளுக்கு ப்ளைனில் தான் ப்ளவுஸ் அணிய வேண்டும். 
• நீள முகத்திற்கு மிக நீண்ட தொங்கட்டான் சரிப்பட்டு வராது. பெரிய மெல்லிதான வளையம் போடலாம். வட்டமான தாமரை வடிவில் தோடு, அரை வட்டமான கல் வைத்த தொங்கு மாடல் தோடு, குடை ஜிமிக்கி போடலாம்.
• உயரமானவர்கள் ஜாக்கெட்டின் கையைக் குட்டையாக வைத்து தைத்துப் போட்டால் எடுப்பாக இருக்கும். ப்ளையின் புடவைக்கான ஜாக்கெட்டை கொஞ்சம் பெரிய வட்டமான கழுத்து வைத்து தைத்து போட்டால் அழகாக இருக்கும்.
• இரு பக்க பட்டையான பார்டர் புடவைக்கு பார்டர் ஜாக்கெட், கைக் குட்டையாக வைத்து உடுத்தவும்.
• பெரிய பூ போட்ட புடவைக்கு ப்ளெயின் ஜாக்கெட், சிறிய பூ போட்ட ஜாக்கெட், பெரிய பட்டையாகக் கோடு போட்ட ஜாக்கெட் அணியலாம். அல்லது அகலமான ஆரம் போடலாம். நல்ல நீளமாகவும் தொங்கட்டான் அணியலாம்.
• கருப்பு மற்றும் மாநிறமானவர்கள் சிவப்பு, ஆரஞ்சு போன்ற நிறங்களைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஆடையை உடுத்துகையில் ஒரே மாதிரி தெரியும். முகம் கொஞ்சம் களைப்படைந்தால் கூட உடை பொருந்தாதது போல் தெரியும்.
• நீங்கள் அடர்ந்த க்ரே, ஆழ்ந்த கறுப்பு போன்ற நிறங்களைத் தவிர்க்கலாம். வெளிர் பிரெளவுன் , வெளிர் சாக்லெட், இளம் பச்சையும், கரும்பச்சையும் அல்லாமல் நடுத்தர பச்சை கலர் பொருந்தும்.
• அடர்த்தியும் இன்றி ரொம்ப வெளிரும் இல்லாத ரோஸ் கலர், அடர்ந்த மஞ்சள் இல்லாமல் லைட்டான கொஞ்சம் கூடுதல் மஞ்சள் கலரில் உடுத்த எடுப்பாக இருக்கும். 
• பாசிக் கலர் நன்றாக இருக்கும். வெளிர் கத்தரிப்பூ கலர் நன்றாக இருக்கும். 
- ஆர். ஜெயலட்சுமி, 
திருநெல்வேலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com