விளக்கு டிப்ஸ்

கார்த்திகைக்கு கட்டாயம் 27 விளக்குகள் ஏற்ற வேண்டும். மண் அகல் கட்டாயம் ஏற்ற வேண்டும்.
விளக்கு டிப்ஸ்

• கார்த்திகைக்கு கட்டாயம் 27 விளக்குகள் ஏற்ற வேண்டும். மண் அகல் கட்டாயம் ஏற்ற வேண்டும்.
• மண் அகல் எண்ணெய்யை உறிஞ்சாமல் இருக்க அதை வாங்கியவுடன் தண்ணீரில் ஊற வைத்து காயவிட்டு எடுத்து பிறகு பயன்படுத்தினால் எண்ணெய் உறிஞ்சாது.
• மண் அகலை நிறைய வாங்கி ஏற்றினால் மண் பாண்ட தொழிலும் வாழும். மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும்.
• பித்தளை விளக்குகளை தேய்த்துவிட்டு விபூதி கொண்டு துடைத்தால் தங்கம் போல மின்னும்.
• வெள்ளி விளக்குகளை வாழைப்பத்தோலால் தேய்த்தால் மின்னும்.
• கார்த்திகை அன்று சிறிய விளக்குகளை இரண்டு அழகான தாம்பாளங்களை எடுத்து அதில் வைத்து ஏற்றி வாசலில் வைத்தால் எண்ணெய்யும் சிந்தாது. எடுத்து வைப்பதும் சுலபம். பார்க்கவும் அழகாக இருக்கும்.
• குத்து விளக்கு கட்டாயமாக ஏற்ற வேண்டும். குத்துவிளக்கில் நெய் ஊற்றி ஏற்றினால் நல்லது.
• மூன்று நாட்கள் ஏற்றிய பிறகு விளக்குகளை எண்ணெய்ப் போக ஒரு துணியால் துடைத்து சோப்பு நீரில் மூழ்க வைத்து பிறகு எலுமிச்சம்பழம், சபீனா, சாக்பீஸ் தூள் கொண்டு தேய்த்தால் எண்ணெய்ப் பிசுக்கு போய் பளிச்சிடும். காய்ந்த துணியால் துடைத்து ஒரு துணி பையில் கட்டி வைத்து விட்டால் மறுவருட கார்த்திகைக்கு எடுக்கும்போது பச்சை களிம்பு ஏறாமல் இருக்கும்.
கார்த்திகை அன்று பெரிய விளக்குகளை பால்கொண்டு தடவி பூவால் "ஓம் சாந்த சொரூபியே நம' என சொல்லி சமாதானம் செய்து திரியை உள்ளே இழுக்க வேண்டும்.
- ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com