கிறிஸ்துமஸ் கேக் டிப்ஸ்
By | Published On : 25th December 2019 10:41 AM | Last Updated : 25th December 2019 10:41 AM | அ+அ அ- |

* கேக் தயாரிக்கும்போது தேவையான பொருட்கள் அனைத்தையும் தனித்தனியாக அளந்து பின்னர் கேக் செய்ய வேண்டும்.
* கேக் வேக வைக்கும்போது அதன்மேல் ஒரு பிரவுன் பேப்பர் போட்டு மூடினால் வெந்தபின்பு கேக்கின் மேல் ஆடை கட்டாமல் இருக்கும்.
* கேக் செய்யும்போது இன்ஸ்டன்ட் காபி பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்தால் கேக் நல்ல கலரும் மணமும் தரும்.
* கேக் செய்ய பொடித்த சர்க்கரையை பயன்படுத்தினால்தான் வெண்ணெய்யும் சர்க்கரையும் சுலபமாகக் குழையும்.
* பழ கேக்குகளுக்கு வெல்லச் சர்க்கரையைச் சேர்த்தால் நல்ல பழுப்பு நிறத்துடன் பார்க்க அழகாக இருக்கும்.
* கேக்கை அதிமாகக் சூடு செய்தால் பிளவுகள் வந்துவிடும். நேரம் மிகவும் முக்கியம்.
* கேக் நன்றாக பேக் ஆக வேண்டுமானால் மைக்ரோஅவன் கதவை அடிக்கடி திறந்து மூடக் கூடாது.
* அக்ரூட் கொட்டையை உடைத்து அதன் பருப்புகளை இரண்டாக ஆக்கி கேக் மேலே தேவையான க்ரீம் தடவி அதன்மேல் பதித்து, செர்ரி பழத்துண்டுகளையும் பதித்தால் பார்க்க சூப்பராக இருக்கும்.
* பாதாம் கேக் செய்யும்போது தோல் நீக்கிய பாதாம் பருப்பை இரண்டு துண்டுகளாக்கி கேக் மேல் பதிக்க வேண்டும்.
* கொப்பரை கேக் செய்யும்போது ஜாமை கேக்கின் பக்கங்களில் தடவி கேக்கை துருவிய கொப்பரையில் புரட்டி செர்ரிப் பழங்களைப் பாதியாக வெட்டி மேலே சிறிது ஜாம் தடவி ஒட்ட வேண்டும்.
* கேக்கின் மேல் கோட்டிங் கொடுக்க ஐசிங் சர்க்கரையோடு சிறிது வெந்நீர் கலந்து கொண்டு உபயோகிக்க வேண்டும். இல்லையேல் கெட்டிப்பட்டுவிடும். எழுத்துகள் வரையும்போது சிரஞ்சியில் எடுத்து உபயோகிக்க வேண்டும்.
* கேக் கலவையில் அரை கிண்ணம் ஆரஞ்சுச் சாறு சேர்த்தால் கேக் அதிக மென்மை தன்மை பெறும்.
* கேக் பாதுகாப்பாக வைக்கும் டின்னில் கேக் காய்ந்து போகாமல் இருக்க அதனுள் ஒருசில ரொட்டி துண்டுகளைப் போட்டு வைக்க வேண்டும்.
- ஆர்.ஜெயலட்சுமி