குளிர்கால குறிப்புகள்
By DIN | Published On : 25th December 2019 10:42 AM | Last Updated : 25th December 2019 10:42 AM | அ+அ அ- |

வெற்றிலைகள் அதிகம் மீந்து விட்டால் அவற்றைத் கழுவி மிளகு, சீரகம் வைத்து அரைத்துச் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால் குளிர் காலத்தில் ஜலதோஷமே பிடிக்காது.
* கடுமையான ஜலதோஷத்தால் தொண்டை கட்டிவிட்டால் சிறிதளவு தேனும், சுண்ணாம்பும் குழைத்து தொண்டையின் வெளிப்பகுதியில் தடவினால் குணமாகும்.
* குளிர் காலத்தில் ஏற்படும் தொண்டை வலி, கமறல், இருமல் போன்றவற்றிற்கு ஒரு கரண்டியில் நெய்யை விட்டுக் காய்ந்ததும் ஒரு சிறு கட்டி வெல்லத்தைப் போட்டு பொங்கி வரும்போது மிளகு அரை தேக்
கரண்டி போட்டு அடுப்பை அணைத்துவிட்டு சற்று ஆறியதும் எடுத்து உருட்டி வாயில் போட்டுக் கொண்டால் சரியாகிவிடும்.
* குளிர் காலத்தில் தூதுவளை ரசம் வைத்து சாப்பிட்டால் சளி, கபம் வராது.
* தலைவலி, காய்ச்சல் இரண்டும் இருந்தால் கடுகை அரைத்து உள்ளங்காலில் பற்றுப்போட அவை நீங்கிவிடும்.
* நொச்சி இலையை வதக்கி அதில் சிறிது உப்பைத் தூவி இளஞ்சூட்டில் நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி பறந்து போகும்.
* குளிர்காலத்தில் முகம் வறண்டு போனால் வாழைப்பழம், தேன், பன்னீர் மூன்றையும் ஒன்றாகக் கலந்து பூசி பத்து நிமிடம் கழித்து கழுவினால் வறட்சி போய்விடும்.
* 5-6 துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, இரண்டு லவங்கம் சேர்த்து நன்றாக அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் குளிரினால் ஏற்பட்ட தலைவலி குணமாகும்.
- ஆர். ராமலட்சுமி, திருநெல்வேலி.