கோலம் டிப்ஸ்...

சிமென்ட் தரையாக இருந்தால், எப்போதும் வாசலை தண்ணீரால் கழுவிய பிறகு தான் கோலம் போட வேண்டும். மண் தரை என்றால் முதலில் பெருக்கி பிறகு நீர் தெளித்து கோலம் போடலாம்.
கோலம் டிப்ஸ்...

 சிமென்ட் தரையாக இருந்தால், எப்போதும் வாசலை தண்ணீரால் கழுவிய பிறகு தான் கோலம் போட வேண்டும். மண் தரை என்றால் முதலில் பெருக்கி பிறகு நீர் தெளித்து கோலம் போடலாம்.
 கோலப்பொடியுடன் பச்சரிசி மாவைக் கலந்து கொண்டால் கோலம் பளிச் என்று இருப்பதுடன்  கோலப்பொடியும் அதிகரித்துக் காணப்படும்.
 கோலப்பொடி வாங்கும்போது வெளுப்பு அதிகமுள்ள பொடியைப் பார்த்து  வாங்குவது நல்லது. சில கோலப்பொடி கலர் டல்லாக இருக்கும் அதில் கோலம் போட்டால் பளிச்சென்று இருக்காது.
  கோலத்தை சுற்றி செம்மண் அல்லது காவி கரை கட்டினால்  கோலம் பார்க்க மிக அழகாக இருக்கும்.
 வாசலில் வண்ணக் கோலங்கள் போடும்போது சலித்த மணலுடன், வண்ணப் பொடிகளை கலந்தால் நிறம் எடுப்பாக தெரியும்.
 மாக்கோலம் போடும்போது பச்சரிசி மாவோடு  சிறிது மைதா மாவு சேர்த்தால் கோலம் சீக்கிரம் அழியாது.
 புள்ளியில்லாமல் கோலம் போடும்போது முதலில் ஒரு புள்ளியை மையமாக வைத்து அதைச்சுற்றி கோலத்தை விரிவாக்க வேண்டும். 
 கோலப்பொடியால் கோலமிடும்போது தரை சற்று ஈரமாகவும்,  மாக்கோலமானால் ஈரம் காய்ந்த பின்பும் கோலமிட வேண்டும். 
  வெள்ளை நிற டைல்ஸில் தரை இருந்தால்  கோலமிடும் முன் செம்மண்ணால் மெழுகி விட்டு அதன்மேல் கோலமிட்டால் பளிச்சென்று தெரியும்.
- எஸ்.சரோஜா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com