சமையல்! சமையல்! (25/12/2019)

எக்லஸ் ஸ்பாஞ்ச் கேக், நட்ஸ் சாக்லெட், பேரீச்சை மஃபின்ஸ், ராக் சாக்லெட்  

எக்லஸ் ஸ்பாஞ்ச் கேக் 

தேவையானவை:
மைதா- ஒரு கிண்ணம் 
கன்டென்ஸ்டு மில்க் -அரை கிண்ணம் 
மாம்பழ ஜாம்- மேலே அலங்கரிக்க (க்ரீமிற்கு பதில்)
ஜெல்லி ஜெம்ஸ் மிட்டாய் தலா- ஒரு மேசைக்கரண்டி
சாக்லெட் சிரப்- தேவையானது
பேக்கிங் சோடா- அரை தேக்கரண்டி
பொடித்த சர்க்கரை }கால் கிண்ணம்
பேக்கிங் பவுடர்- சிறிது
வெண்ணெய்-கால் கிண்ணம்
பால் - அரை கிண்ணம்
உப்பு - ஒரு சிட்டிகை
டூட்டி ஃப்ரூட்டி - 2 மேசைக்கரண்டி
லிட்டில் ஹார்ட் பிஸ்கெட் - ஒன்று அலங்கரிக்க
கலர் ஸ்பிரிங்கல் - 1 மேசைக்கரண்டி 
(மேலே தூவி அலங்கரிக்க)
செய்முறை: மைதாவுடன் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து கொள்ளவும். வாயகன்ற பாத்திரத்தில் இதை கொட்டி பொடித்த சர்க்கரை, வெண்ணெய், பால், உப்பு, கன்டன்ஸ்டு மில்க் சேர்த்து எலக்ட்ரிக் பீட்டரால் நன்றாக அடிக்கவும். டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து கலக்கவும். இந்தகேக் கலவை கட்டி தட்டாமல் இருக்க வேண்டும். உட்புறம் வெண்ணெய் தடவிய அலுமினிய கோல்டு அல்லது சிலிகான் மோல்டில் ஊற்றி 40 - 50 நிமிடங்கள் குக்கரில் வேகவிடவும். அதாவது குக்கரின் அடித்தளத்தில் கால் இஞ்ச்அளவுக்கு கேக் கலவை பாத்திரத்தை வைத்து பிறகு குக்கரை மூடவும். வெயிட் போடக்கூடாது. இடையில் தணலை குறைத்து குக்கரை திறந்து மெல்லிய குச்சியால் குத்திப் பார்க்கவும். மாவு குச்சியில் ஒட்டாமல் இருந்தால் முழுவதும் வெந்துள்ளது என்று அர்த்தம். சிலநேரம் அடியில் வெந்திருக்கும். மேற்புறம் வேகாது. அதனால் பதமும் நேரமும் முக்கியம். வெந்தவுடன் எடுத்து சிறிது ஆறவிட்டு மேற்புறம் மாம்பழ ஜாம் தடவி ஜெம்ஸ் மிட்டாய் ஜெல்லி மிட்டாய் சுற்றிலும் வைத்து லிட்டில் ஹார்ட் நடுவில் வைத்து அலங்கரித்து கலர் சுகர் ஸ்பிரிங் கல் தூவி கேக்கின் சைடில் சாக்லெட் சிரப் தடவி மேற்புறமும் சிறிது ஊற்றி அலங்கரித்து பரிமாறவும்.

நட்ஸ் சாக்லெட் 

தேவையானவை:
மில்க் சாக்லெட் - பார் பாதி 
டார்க் சாக்லெட் - பார் பாதி 
வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
பாதாம், பிஸ்தா, முந்திரி, அக்ரூட் போன்ற 
உடைத்த நட்ஸ் அரை - கிண்ணம்
செய்முறை: சாக்லெட் பார்களை துருவிக் கொண்டு டபுள் பாயிலிங் முறையில் வெண்ணெய் சேர்த்து உருக்கவும். உடைத்த நட்ஸ் சேர்த்து கிளறி இறக்கி சிறிது ஆற விட்டு சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். அரை மணி நேரம் கழித்து எடுத்துப் பரிமாறவும்.

பேரீச்சை மஃபின்ஸ்

 தேவையானவை:
நறுக்கிய பேரீச்சை- 3 மேசைக்கரண்டி
பொடித்த சர்க்கரை -100 கிராம்
மைதா -250 கிராம்
உப்பு- ஒரு சிட்டிகை 
பால்- 250 மில்லி 
சிலிக்கான் மோல்டு கப் - தேவைக்கேற்ப
கஸ்டர்ட் பவுடர்- 2 தேக்கரண்டி
வெண்ணெய் - 100 கிராம் 
பேக்கிங் பவுடர்- 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா- சிறிது 
செய்முறை: பெரிய கிண்ணத்தில் சலித்த மைதா, பொடித்த சர்க்கரை போட்டு கிளறவும். அதனுடன் வெண்ணெய் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து உப்பு கஸ்டர்ட் பவுடர் போட்டு பால் ஊற்றி மிருதுவாக அடித்துக் கொள்ளவும். நறுக்கிய பேரீச்சையை இதில் போட்டு கலக்கவும் . கட்டிகள் இல்லாமல் மிருதுவாக அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை சிலிக்கான் கப் மோல்டு அல்லது வெண்ணெய் தடவிய அலுமினிய மோல்டில் ஊற்றவும். பிரீஹீட் செய்து மைக்ரோவேவ் அவனில் 180 டிகிரி செல்சியஸில் பேக் செய்யவும். வெந்ததும் எடுத்து பரிமாறவும். (அவன் இல்லாதவர்கள் குக்கரில் வேக விடலாம்)

ராக் சாக்லெட்

 தேவையானவை:
மில்க் சாக்லெட் - ஒரு பார்
மில்க் பவுடர் - 2 மேசைக்கரண்டி
கார்ன்ப்ளேக்ஸ் அல்லது சாக்கோஸ் -அரை கிண்ணம்
ஒயிட் சாக்லெட் துருவல் - 2 மேசைக்கரண்டி
செய்முறை: மில்க் சாக்லெட் மற்றும் ஒயிட் சாக்லெட்டை டபுள் ஃபாயிலிங் முறையில் உருக்கிக் கொள்ளவும். இறக்கி வைத்து பால் பவுடர் மற்றும் சார்கோஸ் சேர்த்து கிளறி சிறு சிறு மலைகள் போல பிடித்து வைக்கவும் . பிறகு ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுத்தால் மொறுமொறுப்பாக இருக்கும். இதை செய்வதற்கு மோல்டு தேவையில்லை என்பது கூடுதல் சிறப்பு.
குறிப்பு:- ரெடிமேடாக கார்ன் ப்ளேக்ஸ் , சாக்கோஸ் விதவிதமாக கிடைக்கிறது. எதை வேண்டுமானாலும் பயன்படுத்த லாம்.
- ஜோ. ஜெயக்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com