சுடச்சுட

    
    MAVADU

    கூட்டு, குழம்புக்குரிய காய்கறிகளை முதல்நாள் இரவிலேயே நறுக்கி வைத்து விடுங்கள்.
    தேங்காயைத் துருவி காற்று புகாத பாட்டிலில் அடைத்து பிரீசரில் வைத்துவிடுங்கள். மூன்று நான்கு நாட்கள் அதனை பயன்படுத்தலாம்.
    குழம்பு, கூட்டு வகைகளுக்கு தேங்காய்ப்பால் தேவைப்பட்டாலும் முதல் நாள் இரவிலேயே தயாரித்து பிரிஜ்ஜில் வைத்துவிடலாம்.
    பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் போன்றவைகளை தோல் நீக்கி சுத்தப்படுத்தி பிரிஜ்ஜில் வைத்திருந்தால் தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தலாம்.
    கட்லெட் தயாரித்து முட்டையிலும் ரொட்டித் தூளிலும் முக்கி பிரிஜ்ஜில் வைத்திருந்தால் தேவைப்படும் நாளில் எடுத்து வறுத்துப் பயன்படுத்தலாம்.
    சான்ட்விச்சின் உள்ளே வைக்கும் பொருட்களையும் முதலிலேயே தயாரித்துவைத்துவிட்டால் தேவைப்படும்போது ரொட்டித் துண்டுகளை வைத்து உடனே தயாரிக்கலாம். 
    - ஆர்.ராமலட்சுமி, திருநெல்வேலி.

    * வெண்டைக்காயைப் பொறியல் செய்வதற்கு முன்பு, வெண்டைக்காயை நறுக்கி வெயிலில் சிறிது நேரம் காய வைத்துப் பிறகு பொரியல் செய்தால் வழ வழப்பு நீங்கிவிடும்.
    * ரவா தோசை செய்யும்போது இரண்டு தேக்கரண்டி சோளமாவு சேர்த்து செய்து பாருங்கள். தோசை நன்கு சிவந்து மொறு, மொறுவென நன்றாக இருப்பதோடு உடம்பிற்கும் நல்லது.
    * வெண்ணெய்யில் உப்பைத் தூவி விட்டால் அது நாட்பட்டாலும் கெடாமல் இருக்கும்.
    * ஊறுகாய் தயாரிக்கும்போது கடுகுக்கு பதில் சிறிதளவு சோம்பை தாளித்து சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
    * மாவடு ஊறுகாயில் சிறிதளவு விளக்கெண்ணெய் சேர்த்தால் பூச்சிகள் வராமல் நீண்டநாள் இருக்கும். விரைவில் கெட்டும் போகாது.
    * பிரிட்ஜ்ஜில் இட்லி மாவை வைக்கும்போது உப்பு சேர்க்கக் கூடாது. உப்பு சேர்த்து வைத்தால் விரைவில் மாவு புளித்து, கெட்டு விடும்.
    * கோதுமை மாவை அரைத்து அதில் ஒரு டம்ளர் மோர் ஊற்றி கரைத்து உடனே தோசை வார்க்கலாம்.
    - எல். உமா ராதாகிருஷ்ணன், வாணியம்பாடி.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai