சுடச்சுட

  

  லட்சம் வேண்டாம்! லட்சியம் போதும்!! - பெண் பத்திரிகையாளர் சாதனா

  By DIN  |   Published on : 07th February 2019 10:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  SADHANA

  படித்து முடித்துவிட்டு சில ஆயிரம் மாதச் சம்பளத்தில் வேலைக் கிடைத்தால் போதும், என்று நினைக்கும் பட்டதாரிப் பெண்கள் மத்தியில், லட்சங்களில் கிடைத்த வேலையை விட்டுவிட்டு, தனது லட்சியத்தை நிறைவேற்ற பத்திரிகையாளர் பணியை ஆர்வத்துடன் செய்து வருகிறார் சாதனா.
   யார் இந்த சாதனா?
   வையைப் பூர்வீகமாகக் கொண்ட சாதனா, மைசூரில் படித்து வளர்ந்தவர். அப்பா, அம்மா இருவருமே விவசாயிகள். தங்கை, தம்பி என இரு உடன்பிறப்புகள். தன்னுடைய 17 வயதில் லண்டன் சென்றார். அங்குக் கல்வி உதவித்தொகை பெற்று கணக்கியல் (ஹஸ்ரீஸ்ரீர்ன்ய்ற்ண்ய்ஞ்) படித்தார். தொடர்ந்து அதே துறையில் பணிக்குச் சேர்ந்தார். தன்னுடைய உழைப்பால் பல்வேறு உயர்ப்பதவிகளை அடைந்தார். அங்கேயே திருமணமும் செய்து கொண்டார். அவர் இறுதியாக வாங்கிய சம்பளம் மட்டுமே 95 லட்சம். அதனைத் தொடர்ந்து அந்த வேலையை விட்டுவிட்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ சர்வதேச வளர்ச்சி பற்றிப் படிப்பை தேர்தெடுத்துப் படித்தார். அந்தப் படிப்பின் மீது ஆர்வம் குறையவே, லண்டன் பல்கலைக்கழகத்தில் ஆவணப்படம் தயாரித்தல் மற்றும் புலனாய்வு இதழியல் பற்றிய படிப்பை முழு நேரம் படித்து, தற்போது புலனாய்வு இதழியல் பணியை மேற்கொண்டு வருகிறார்.
   உங்கள் முதல் படைப்பு பற்றிச் சொல்லுங்கள்?
   "என்னுடைய புலனாய்வு இதழியல் படிப்பு தொடர்பாக ஆவணப்படம் ஒன்று எடுத்துச் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான தேடலில் இறங்கிய போது கெளசல்யா-சங்கர் திருமணம் பற்றியும், ஆணவப்படுகொலைப் பற்றிக் கேள்விப்பட்டேன். உடனே தமிழ்நாட்டிற்கு வந்தேன். கௌசல்யா மற்றும் அவருடைய பெற்றோரிடம் பேசி ஆவணப்படப் பணிகளை தொடர்ந்தேன். இருதரப்பில் சொன்ன விஷயங்கள் அத்தனையும் பதிவு செய்தேன். அப்போது வழக்கு தொடர்பான தீர்ப்பு வெளியாகவில்லை. தீர்ப்பு வரும் வரை காத்திருந்தேன். காரணம் தீர்ப்பு தான் என்னுடைய ஆவணப் படத்தின் முடிவாக இருந்தது. நான் ஆணவப்படுகொலைப் பற்றி படமெடுப்பதைக் கேள்விப்பட்ட ஞ்ழ்ஹண்ய் ம்ங்க்ண்ஹ என்ற நிறுவனம், என்னுடைய படைப்பைப் பார்த்துவிட்டு அதனை அல் ஜெசீரா தொலைக்காட்சியினரிடம் அனுப்பினார்கள். அவர்கள் என்னிடமிருந்து ஆவணப்படத்தை வாங்கிக் கொண்டார்கள். 8 மாதங்களாக எடுக்கப்பட்ட படம் 2018- ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. அனைத்துத் தரப்பிலிருந்தும் வரவேற்பு பெற்றுத் தந்தது. ஆணவப்படுகொலைப் பற்றிய விஷயத்தை உலகத்திற்கு எடுத்துச் சென்றதற்காக இதுவரை எனக்கு மூன்று விருதுகள் கிடைத்துள்ளன. மேற்கொண்டு 6 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளேன். தமிழ்நாட்டுப் பெண்ணாக தமிழகத்தில் நடந்த விஷயத்தைப் படமாக்கியது மகிழ்ச்சியாக இருக்கிறது''.
   
   உங்கள் ஆவணப்படத்திற்கு எதிர்ப்பு வரவில்லையா?
   "ஆமாம். 70 மணி நேரம் எடுக்கப்பட்ட படம். இதற்கான திரைக்கதையைப் பல நாட்கள் செதுக்கி இருந்தேன். ஆணவப்படுகொலையைப் பற்றிய விஷயங்களை மட்டும் 28 நிமிடங்கள் தொகுத்து வழங்கினேன். படம் வெளியானது கௌசல்யா, மற்றும் அவரது தாயார் தரப்பிலிருந்தும் என்னிடம் பேசினார்கள். நான் யாரையும் தவறாக காட்ட முயற்சிக்கவில்லை. நமது சமூகத்தின் தப்பு என்ன என்பதைச் சொல்லியிருக்கிறேன். தமிழ்நாட்டில் இருக்கும் சில ஆவணப்படைப்பாளிகள் இன்னும் இதனை அழகாகச் சொல்லியிருக்கலாம் எனக் கருத்து சொன்னார்கள். இங்கே படம் எடுப்பவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் அனுமதி கேட்பதில்லை. ஆனால், என்னுடைய படத்தில் ஒவ்வொரு காட்சியும் அவர்களிடம் அனுமதி கேட்காமல் படமாக்கவில்லை. அப்போது தான் அதனைச் சர்வதேச தளத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்''.
   
   உங்கள் அடுத்தப்படம் பற்றி?
   "இந்தியாவில் எப்போதும் பரபரப்பாக பேசப்படும் இடத்தை பற்றி உண்மை நிகழ்வுகளைப் பதிவு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளேன். தொடர்ந்து மலை வாழ் மக்களைப் பற்றிய படம் எடுக்கத் திட்டமிட்டுள்ளேன் '' என்றார்.
   -ராஜன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai