சுடச்சுட

  
  mn13

   

  21-ஆம் நூற்றாண்டின் சிறந்த பாடகி!

  பெங்களூரில் வசிக்கும் கவிதா கிருஷ்ணமூர்த்தி (வயலினிஸ்ட் எல். சுப்ரமணியத்தின் மனைவி) கடந்த 30  ஆண்டுகளில் அனைத்துத் திரைப்பட இசையமைப்பாளர்களின் இசையமைப்பில்  16 மொழிகளில்  18 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். சிறுவயதிலேயே பலராம்புரி என்பவரிடம் இந்துஸ்தானி சங்கீதம் பயின்று எட்டு வயதில் இசைப்போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற இவருக்கு, 2005-ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 1994-96 ஆம் ஆண்டுகளில்  சிறந்த பின்னணி பாடகிக்கான பிலிம்பேர்  விருது பெற்ற இவர்,  இதுவரை பெற்ற விருதுகளுக்கு கணக்கே இல்லை. சமீபத்தில் 21-ஆம் நூற்றாண்டின் சிறந்த பாடகி  என்ற விருதும் இவருக்கு கிடைத்துள்ளது.
   

  மன்னிப்பு கேட்க மறுத்த கங்கனா!


  தான் நடித்து  இயக்கிய  "மணிகார்னிகா'  தி குயின்  ஆப் ஜான்சி' திரையிட்டபோது, ""எதிர்ப்பு  தெரிவித்தவர்களை  அழித்துவிடுவேன்'' என்று கூறியதற்காக  மன்னிப்பு கேட்கும்படி  கார்னிசேனா  கேட்டதற்கு,  ""என் மீது தவறு  ஏதும் இல்லாதபோது எதற்காக மன்னிப்பு  கேட்க வேண்டும்'' என்று கூறிய கங்கனா ரணாவத், சமீப காலமாக சத்குரு ஜக்கி வாசுதேவ் அறிவுரைகளைக் கேட்டு நடந்து வருகிறாராம். ""இன்று நான் நல்ல நிலைமையில்  இருப்பதற்கு  என் குருநாதர்கள்தான் காரணம். என்னுடைய முதல் குருநாதர்  விவேகானந்தர்.  பின்னர்  யாரோ என்னை  அடைத்து வைத்தாற் போல் இருந்த நிலையிலிருந்து என்னை மீட்டவர்  சத்குரு ஜக்கி வாசுதேவ்'' என்கிறார்  கங்கனா.


  சிறந்த நடிகையாக பெயரெடுக்க ஆசை!

  புருவ  கண்ணசைப்பின் மூலம்   பிரபலமான  பிரியா பிரகாஷ்  வாரியார் நடித்துள்ள "ஒரு ஆதார்  லவ்'  என்ற மலையாளப் படம் நான்கு மொழிகளில் டப்பிங் செய்து  வெளியிடப்படவுள்ளது. கன்னடத்தில்  டப்பிங்  செய்யப்படும் முதல் மலையாளப் படம் இதுதான். ""சிறுவயதிலிருந்தே நடிகையாக வேண்டுமென்ற  ஆவலில் இருந்த எனக்கு  "ஒரு ஆதார் லவ்' படத்தில்  ஓரிரு காட்சியில்  தோன்றும்  வாய்ப்பு கிடைத்தது.  ஆனால்,  என்னுடைய  நடிப்பைப் பார்த்த இயக்குநர்  படம் முழுவதும் வரும்படி பாத்திரத்தை மாற்றினார். அனைத்து மொழிகளிலும்  நடித்து  சிறந்த நடிகை என பெயரெடுக்க வேண்டும் என்பது தான்  என் ஆசை''  என்கிறார்  பிரியா வாரியார்.


  அஜித் படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத்

  மறைந்த  நடிகை  ஸ்ரீதேவியின்  கணவர் போனிகபூர், தமிழில்  தயாரிக்கும் "பிங்க்' ரீமேக் படத்தில் அஜித்  ஜோடியாக  வித்யாபாலனை அறிமுகப்படுத்துவதோடு,  இந்தியில்  தாப்சி  பன்னு நடித்த பாத்திரத்தில் ஸ்ரத்தா  ஸ்ரீநாத்தை ஒப்பந்தம்  செய்துள்ளார்.  ""அஜித்  படத்தில் நடிப்பதற்காக என்னை  நேரில் சென்னை  வரச் சொல்லி  ஒரு காட்சியில் நடிக்க வைத்த பின்  சில வாரங்கள் எந்த தகவலும் இல்லை.  மீண்டும்  என்னை வைத்து முக்கியமான  காட்சிகளை  எடுத்தவுடன், இயக்குநர்  வினோத்  ஒ.கே கூறிய பின்பே நான் அஜித்துடன்  நடிப்பது  உறுதியாயிற்று.  அதன் பின்னரே இந்த தகவலை  தயாரிப்பாளர் அனுமதியுடன்  வெளியிட்டேன்''  என்கிறார் ஸ்ரத்தா  ஸ்ரீநாத்.


  அமெரிக்காவுக்கே திரும்பும் தனுஸ்ரீ தத்தா

  ""மும்பையில்  உள்ள என் பெற்றோரைப்  பார்ப்பதற்காகவே  நான் இந்தியாவுக்கு வந்தேன். 2009-  ஆம் ஆண்டு  வெளியான  "ஹார்ன்  ஒகே ப்ளீஸ்'  என்ற படத்தில்  நடித்தபோது  எனக்கேற்பட்ட  அனுபவத்தை   பற்றி கூறினேனே தவிர,  மீ.டு  என்ற சர்ச்சையை  தொடங்க வேண்டுமென்ற எண்ணம் ஏதும் எனக்கில்லை.  34 வயதாகும் எனக்கு  மீண்டும்  சினிமா வாய்ப்புக்காகவோ, விளம்பரத்திற்காகவோ இங்கு வரவில்லை. என் வாழ்க்கையில் ஏற்பட்ட இடைவெளியை  ஆன்மிக  சிந்தனைகள்  மூலம் நிரப்ப விரும்புகிறேன்''  என்று கூறும்  தனு ஸ்ரீ தத்தா, விரைவில்  அமெரிக்கா கிளம்பவுள்ளார்.


  பாலிவுட்டில் மேலும் ஒரு வாரிசு நடிகை!

  பாலிவுட்டில்  அறிமுகமாகியுள்ள  முன்னாள்  நடிக- நடிகையர் வாரிசுகள் சாரா அலிகான்.  ஜான்வி கபூர்,  அனன்யா   பாண்டே  ஆகியோரை  தொடர்ந்து,  பூஜா பேடியின் மகள் ஆலியாவும் திரைப்படங்களில் நடிக்க வந்துள்ளார். தன்னுடைய  நடன வீடியோவை சமூக வலைதளத்தில்  பதிவிட்டுள்ள ஆலியா, "ஜவானி ஜானேமன்'  என்ற படத்தில் சயீப்  அலிகானின்  மகளாக  நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai