சுடச்சுட

  
  mn1

  வெள்ளி மங்கையிலிருந்து   தங்க மங்கையான  முகூர்த்தமோ என்னவோ பி. வி. சிந்துவைத் தேடி  ஐம்பது கோடி  ரூபாய்  ஒப்பந்தம்  வந்துள்ளது.  சீன விளையாட்டு பொருள்கள் தயாரிக்கும் நிறுவனமான  "லி நிங்'  சிந்துவை தனது விளையாட்டுப் பொருள்களின்  விளம்பரத் தூதுவராக  சிந்துவை  நான்கு ஆண்டுகளுக்கு நியமித்துள்ளது. 

  சென்ற மாதம்  இதே  நிறுவனம்  இறகுப் பந்தாட்ட வீரரான  கிடம்பி ஸ்ரீகாந்தை முப்பத்தைந்து   கோடிக்கு வளைத்துப் போட்டிருந்தது. 

  சிந்துவுக்கு கிடைத்திருக்கும்  இந்த ஒப்பந்தம்   இறகுப் பந்தாட்டத்தில்  முக்கிய,   மதிப்பு கூடிய ஒப்பந்தமாகும்.  முன்னணி கிரிக்கெட் வீரர்  ஒருவருக்குக் கிடைத்து வரும்  ஒப்பந்தம் போல்,  இறகுப் பந்தாட்டக்காரர்களுக்கும் ஒப்பந்தங்கள்  கிடைக்க ஆரம்பித்துள்ளது.  கோடிகளின்  மழை  இறகுப் பந்தாட்டத்திலும்  பெய்யத்  தொடங்கிவிட்டது..!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai