சுடச்சுட

  
  mn5

   

      வேப்பம் பூவுடன் மிளகு சீரகம் சேர்த்து உண்டு வர பித்தப்பை நோய் குணமாகும்.

      காலையிலும், இரவிலும் காய்ச்சியப் பசும்பாலில் தேன் கலந்து குடித்து வந்தால் ரத்த சோகை குணமாகும்.

      கரிசலாங்கண்ணி கீரையுடன் பருப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

      மாதுளம் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி, எலும்பு  உறுதி, பற்கள் கெட்டிப்படும்.

      அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர முகப்பருக்கள் மறையும்.

      மாதவிடாய் காலங்களில் கோதுமை கஞ்சி சாப்பிட்டு வர உடற் சோர்வு நீங்கி பலம் பெறும்.

      பல் ஈறுகளை ஆட்காட்டி விரல்களால் நன்றாக அழுத்திக் கொடுக்க இரத்த ஒழுக்கு நிற்கும். ஆடும் பல் கூட  உறுதியாகும்.

      வில்வ இலையின் தளிரை வதக்கி இளம் சூட்டுடன் கண்களின் மீது ஒத்தடம் கொடுக்க கண் வலி, கண் சிவப்பு, அரிப்பு நீங்கும்.

      சப்போட்டா பழத்தை தினம் பகல் பொழுதில் சாப்பிட்டு வர இரவில் நன்றாக தூக்கம் வரும்.

      மாதுளம் பூ இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வர மலத்துடன் ரத்தம் வருவது நிற்கும்.

      வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தின்று சுடு நீர் பருகி வர ஆஸ்துமா குணமாகும்.

      கடற் சங்கை பசும்பால் விட்டு இழைத்து பருக்கள் மீது தடவி வர இரண்டு நாளில் பருக்கள் மறையும்.

      துளசி இலையை கசக்கி அதன்சாற்றை முகத்தில் தடவி காய விட்டு, குளித்து வந்தால் முகம் அழகு பெறும்.

      நன்னாரி வேர் ஐந்து கிராம் எடுத்து அரைத்து பசும் பாலில் கலந்து சாப்பிட்டு வர நீர் கடுப்பு, நீர் சுருக்கு குணமாகும்.

      சர்க்கரை வள்ளிக்கிழங்கை காயவைத்து இடித்து தூளாக்கி பசும் பாலுடன் சாப்பிட்டு வர உடல் உருக்கி நோய் குணமாகும்.

      கோவை இலை சாறு நல்லெண்ணெய்யில் காய்ச்சி தலை மூழ்கி வர சொறி, சிரங்கு, படை நீங்கும்.

      கர்ப்பிணி பெண்கள் நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி இவைகளை உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால் வீக்கம் வராது.

      வெள்ளைப் பூண்டு அரைத்து எலுமிச்சை பழச்சாற்றில் கலந்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் பேன் தொல்லை நீங்கும்.

      கொத்துமல்லி சாறெடுத்து முன் நெற்றியில் பற்றுப் போட்டால் தலை பாரமாக இருத்தல் விலகும்.

      செம்பருத்திப் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து, தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் இதயம் பலம் பெறும்.

  ("எளிய பாட்டி வைத்தியம்' -என்ற நூலிலிருந்து)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai