டிப்ஸ்

போளி தட்டும்போது வாழைஇலையின்  பின் பக்கமாகத் தட்டினால்  இலை சுருங்காமல்  போளி நன்றாக வரும்.
டிப்ஸ்


  போளி தட்டும்போது வாழைஇலையின்  பின் பக்கமாகத் தட்டினால்  இலை சுருங்காமல்  போளி நன்றாக வரும்.

 கொதிக்கும்  பாலை உடனே  உறை ஊற்ற  வேண்டுமாயின்  ஒரு துண்டு வாழைப்பட்டையை நறுக்கிப்  போட்டு மோர்  ஊற்ற வேண்டும்.

   தீய்ந்தப்  பாலில்  சூடு  ஆறும் முன்னர்  மிளகைத் தட்டிப் போட்டால்  பாலின் ருசி மாறாமல்  இருக்கும்.

  கேக்  அல்லது  பிஸ்கட்  செய்து முடித்தபின்  ஓவன் சூடாகவே  இருக்கும். பழைய பிஸ்கட்,  முறுக்கு  போன்றவற்றை  உள்ளே வைத்தால்  புதிது போன்று மொரமொரப்பாக  இருக்கும்.

  ரசத்திற்கு   தாளிக்கும் பொழுது  சிறிது நெய்யில்  கடுகுடன்  நான்கைந்து  முழு மிளகையும்  சேர்த்துத் தாளித்தால்  ரசம்  மணக்கும்.

 மகிழம்பூ   அச்சில்  முறுக்கு செய்யும்போது  தேங்காய்ப் பாலில் சிறிது  சர்க்கரையைக்  கலந்து பிசைந்தால்  முறுக்கு  அதிகச் சுவையுடன்  இருக்கும்.

  புட்டு மிருதுவாக  இருக்க மூன்றில்  ஒருபாகம்  புழுங்கல்  அரிசியையும்,   இரண்டு பாகம்  பச்சை  அரிசியையும்  மாவாக்கி  தயார்  செய்ய வேண்டும்.

  உளுந்து வடை  மாவு நெகிழ்ந்துவிட்டால்  ஒரு பிடி மெது அவலைக்  கலந்து தட்டினால்  தட்ட  இலகுவாகவும் வடையின்  மிருதுத் தன்மை குறையாமலும்  இருக்கும்.

   ஆப்பத்திற்கு  மாவு அரைக்கும்போது,  பச்சரிசியை  ஊற வைத்து  அதனுடன்  ஒரு மூடி  தேங்காய்த் துருவல்,  ஒரு கரண்டி பழைய சாதம்  முதலியவற்றையும்  போட்டு அரைத்தால் ஆப்பம்  வாசனையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

 வெண்டைக்காய்,  சேப்பங்கிழங்கு  இவற்றை வதக்கும்போது  கொஞ்சம் கடலை மாவைத் தூவி வதக்கினால்  பொரியல்  கொழகொழவென்று  சேராமல் சிவந்து மொறு மொறுவென்று இருக்கும்;  எண்ணெய்யும்  அதிகம் தேவைப்படாது.

 தேங்காய்ச் சட்னி தயார்  செய்யும்போது  புளி சேர்ப்பதற்கு  பதிலாக எலுமிச்சம் சாறை  பிழிந்து  விடுங்கள்.  சட்னி சாப்பிடுவதற்கு  மிகவும்  ருசியாக இருக்கும்.

  குழம்பு,  பொரியல்  செய்வதற்கு  தக்காளியை நறுக்கும்போது   மிகவும் பொடியாக  நறுக்கி  சமைத்தால் விரைவில்  வெந்துவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com