சமையல்! சமையல்!

வரகு பேரீச்சை பொங்கல், பேரீச்சை குழம்பு, பேரீச்சை சுகியன், பேரீச்சை சாலட், பேரீச்சை லட்டு

வரகு பேரீச்சை பொங்கல்

தேவையானவை:
வரகு அரிசி - 1 கிண்ணம்
பாசிப்பருப்பு - கால் கிண்ணம்
கொட்டை நீக்கிய பேரீச்சை - முக்கால் கிண்ணம்
பால் - 1 டம்ளர்
பால்கோவா - கால் கிண்ணம்
நெய் - 4 தேக்கரண்டி
செய்முறை: அரிசி, பருப்பு வகைகளை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுக்கவும். மிக்ஸியில் ரவையாக பொடிக்கவும். பிரெஷர் ஃபேனில், நெய் சேர்க்கவும். பேரீச்சை சேர்த்து வதக்கவும். பால்கோவா சேர்க்கவும். இத்துடன் பால், 3 கிண்ணம் தண்ணீர், உடைத்த கலவை சேர்க்கவும். 3 விசில் வந்ததும் இறக்கி ஆறவிடவும். பின்னர், எடுத்து பரிமாறவும். வெல்லம், சர்க்கரை இல்லாமல் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

பேரீச்சை குழம்பு

தேவையானவை:
விதை நீக்கின பேரீச்சை - அரை கிண்ணம்
வெந்தயம், பெருங்காயத்தூள் - கடுகு - தலா அரை தேக்கரண்டி 
கரகரப்பாக பொடித்த வேர்க்கடலை - கால் கிண்ணம்
கசகசா - 2 தேக்கரண்டி
கெட்டி புளிக்கரைசல் - 4 தேக்கரண்டி
உப்பு - ருசிக்கேற்ப
மிளகாய் வற்றல் - 4
கறிவேப்பிலை - 2 ஈர்க்கு
நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி 
செய்முறை: வெறும் வாணலியில் , வெந்தயம், கடுகு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, கசகசா சேர்த்து, வறுத்து, மிக்ஸியில் கரகரப்பாக பொடிக்கவும். பேரீச்சம் பழத்தை அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய்ச் சேர்க்கவும். அரைத்த பேரீச்சம் பழம் சேர்த்து வதக்கவும். இத்துடன், உப்பு, புளிக்கரைசல், 1 கிண்ணம் தண்ணீர், பொடித்தப் பொடி, பொடித்த வேர்க்கடலை சேர்க்கவும். தளதளவென கொதிக்கும்போது, அடுப்பை அணைக்கவும். பல சுவைகள் சேர்த்து, இருக்கும். சப்பாத்தி, பூரிக்குத் தொட்டுக் கொள்ளலாம்.

பேரீச்சை சுகியன்

தேவையானவை:
பாசிப்பருப்பு -அரை கிண்ணம்
பேரீச்சை விழுது - அரை கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 கிண்ணம்
உப்பு - சிட்டிகை
எண்ணெய் - தேவையானளவு.
செய்முறை: வாணலியில் பாசிப்
பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும். இதை மிக்ஸியில் பொடியாக்கவும். இத்துடன், பேரீச்சை விழுது, தேங்காய்த் துருவல் சேர்த்து கலக்கவும். நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக்கவும்.
உளுந்தம் பருப்பை அரைமணி நேரம் ஊற வைக்கவும். இத்துடன் சிட்டிகை உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். 
வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைக்கவும். பேரீச்சை உருண்டை , அரைத்த உளுந்தம் பருப்பில் தோய்த்து, எண்ணெய்யில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். 

பேரீச்சை சாலட்

தேவையானவை
மிகப் பொடியாக நறுக்கிய பேரீச்சம் பழம்,
தேங்காய்த் துருவல், பரங்கித் துருவல், - தலா கால் கப்
பாதாம், முந்திரி - தலா 5
கரகரப்பாக பொடித்த மிளகு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
ஆலிவ் எண்ணெய் - கால் தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு - கால் தேக்கரண்டி
செய்முறை: அகலமான பாத்திரத்தில் ஆலிவ் எண்ணெய் , உப்பு, எலுமிச்சைச்சாறு, மிளகுப் பொடி சேர்த்து நன்றாக கலக்கவும். இத்துடன் பேரீச்சம் பழம், துருவின தேங்காய், துருவின பரங்கி, பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி சேர்த்து கலந்து பரிமாறவும். காரசாரமான புலாவ் வகைகளுடன், சாப்பிடலாம். விருப்பப்பட்டால், கொஞ்சம் தயிர் சேர்க்கலாம். சுவையான பேரீச்சை சாலட் தயார்.

பேரீச்சை லட்டு

தேவையானவை:
பிரட் துண்டுகள் - 4
பேரீச்சை - கால் கிண்ணம்
பாதாம் - 10
ஏலக்காய்த் தூள் - கால் தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
செய்முறை: பிரட்டை மிக்ஸியில் பொடிக்கவும். பாதாமை கரகரப்பாக பொடிக்கவும். பேரீச்சம் பழத்தையும் அரைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில், எல்லாம் ஒன்றாகப் போடவும். நெய், ஏலக்காய்த் தூள், சேர்த்து, நன்கு கலந்து, உருண்டைகளாக்கவும். திடீர் விருந்தினர்களுக்கு சட்டென்று செய்யலாம் பேரீச்சை லட்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com