Enable Javscript for better performance
கூலா ஒரு தொழில்..!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு வார இதழ்கள் மகளிர்மணி

    கூலா ஒரு தொழில்..!

    By DIN  |   Published On : 28th February 2019 10:49 AM  |   Last Updated : 28th February 2019 10:49 AM  |  அ+அ அ-  |  

    mm3

    இல்லத்தரசிகளும் தொழில் முனைவோர் ஆகலாம்! 42
    "நாம் ஒரு தொழிலை கற்றபின் இதைத்தான் செய்ய வேண்டும் என்று முடிவு செய்த பின் அதில் முழு மூச்சாக, விடாமுயற்சியுடன் செய்து வர வேண்டும் . அப்போதுதான் நல்ல பலன் கிடைக்கும். செய்யும் தொழிலே தெய்வம். தெய்வமே நம்மை கைவிட்டு விட்டதாக நாம் நினைத்தாலும், நம்முடைய விடா முயற்சி நம்மை ஒருநாளும் கைவிடாது. இதைத்தான் "தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி; தன் மெய்வருத்த கூலி தரும்' என்று திருவள்ளுவர் அன்றே கூறியுள்ளார். எனக்கு பல ஊர்களிலிருந்து பேசுவோர், நாங்கள் உங்கள் கட்டுரையைப் படித்து இந்த சிறு தொழில் செய்கிறோம், என்பார்கள். வேறு சிலர் பயிற்சி எடுத்துக் கொண்டு புதிதாக தொடங்கி செய்து வருகிறார்கள். ஒரு சிலர் கட்டுரையைப் படித்து அதில் அவர்கள் தொழில் செய்வதாக கூறினீர்களே அவர்களின் போன் நம்பரை கொடுங்கள் என வாங்கி விடுகிறார்கள். அதோடல்லாமல் அவர்களிடம் போனிலேயே பல தரப்பட்ட கேள்விகளைக் கேட்டு அவர்களை உற்சாகமிழக்கச் செய்து வருகிறார்கள். அவர்களே இப்போதுதான் தொழில் தொடங்கி செய்து வருகிறார்கள். அதில் அதிக அனுபவம் ஏற்பட நாளாகும். ஆதலால் தொழில் சம்பந்தமாக விளக்கங்களுக்கு அதில் அதிக அனுபவம் உள்ளவர்கள் அணுகினால் தேவையான விளக்கம் கிடைக்கும். கோடைக்காலம் தொடங்கிவிட்டது. கடைகளில் பார்த்தால் பல நிறங்களில் பாட்டிலில், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட கூல் டிரிங்ஸ் விற்கப்படும். இதையே நாம் தரமான முறையில் வீட்டிலேயே செய்து விற்பனை செய்யலாம். இதை எப்படி செய்வது எனப் பார்க்கலாம்'' என்கிறார் சுயதொழில் ஆலோசகர் உமாராஜ்.

    லிம்கா தேவையான பொருள்கள்
    சர்க்கரை - 700 கிராம்
    தண்ணீர் - 350 மில்லி
    சிட்ரிக் அமிலம் - ஒன்றரை தேக்கரண்டி
    கலர் - எலுமிச்சம் பேஸ்
    எஸன்ஸ் - எலுமிச்சம் மஞ்சள் 1 தேக்கரண்டி
    உப்பு - 1 சிட்டிகை
    சர்க்கரையில் தண்ணீர் ஊற்றி அதில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள சிட்ரிக் போட்டு கலக்க வேண்டும். பின்னர், நன்கு கொதிக்க விட வேண்டும். பின்னர், அதை நன்கு ஆற வைத்து கலர், எஸன்ஸ் சேர்த்து கலந்துவிட்டு உபயோகப்படுத்தலாம். ஒரு பங்கு சர்பத்தில் 3 பங்கு தண்ணீர் ஊற்றி கலந்து பயன்படுத்த வேண்டும். இதனுடன் கோலி சோடா வாங்கி கலந்து குடித்தால். கடையில் விற்கும் லிம்கா ரெடி.
    இது போன்ற ஜூஸ் தயாரிப்பதற்கான எசன்ஸ் எல்லா கடைகளிலும் கிடைக்காது. உங்கள் பகுதியில் உள்ள எசன்ஸ் விற்கும் கடைகளில் அனைத்து பொருள்களும் கிடைக்கும்.

    கோலா தயாரிப்பு தேவையான பொருள்கள்
    சர்க்கரை - 700 கிராம்
    தண்ணீர் - 350 கிராம்
    சிட்ரிக் அமிலம் - ஒன்றரை தேக்கரண்டி
    கலர் - கோலா "ஏ' பேஸ்ட் 1 தேக்கரண்டி
    எஸன்ஸ் - கோலா "பி' எஸன்ஸ் 1 தேக்கரண்டி
    உப்பு - 1 சிட்டிகை
    ஏற்கெனவே சொன்னது போன்று இதையும் தயாரித்து உபயோகப்படுத்த வேண்டும். முதலில் சிறியதாக செய்து பார்த்து நன்றாக உள்ளதா என அறிந்து பின்னர் விற்பனைக்கு தயார் செய்ய வேண்டும். எந்தப் பொருளை விற்பதாக இருந்தாலும் அதன் தரம் உறுதி செய்யப்பட வேண்டும். முதலில் சிறிய அளவாக செய்து விற்பனை செய்யுங்கள். விற்பனை நன்றாக உள்ளது எனில் கொஞ்சம், கொஞ்சமாக உற்பத்தியை அதிகரிக்கலாம்.
    ராஜ்புத் குளியல் பொடி குறித்த தகவலுக்கு- 9500148840 தொடர்பு கொள்ளவும்.
    - ஸ்ரீ



     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp