முகப்பு வார இதழ்கள் மகளிர்மணி
நடிப்பதை நிஜமாக கருதக் கூடாது!
By DIN | Published On : 28th February 2019 10:22 AM | Last Updated : 28th February 2019 10:22 AM | அ+அ அ- |

2012-ஆம் ஆண்டு "சூரியகாந்தி' என்ற கன்னட படத்தின் மூலம் திரையில் அறிமுகமான ரெஜினா காஸன்ட்ரா, தொடர்ந்து தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்தவர், அண்மையில் வெளியான "ஏக் லட்கி கோ தேக்கா தே ஐஸா லகா' என்ற இந்திப் படத்தில் சோனம் கபூருடன், நடித்திருந்தார். இதற்கு ஓரின சேர்க்கை ஆதரவாளர்கள் இவரை பாராட்டியதோடு, முன்னுதாரணமாக கொள்வதாக குறிப்பிட்டிருந்தனர். ""நான் எப்போதுமே எல்லாரையுமே நேசிக்கும் குணமுடையவள். ஒரு குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் பாராட்டியதற்காக நான் அவர்களை சார்ந்தவளாகி விட மாட்டேன். படத்தில் நடிப்பதை நிஜமாக கருதக் கூடாது. அதே நேரம் அவர்களை ஒதுக்கவும் முடியாது. அவர்கள் பிரச்னையையும் பக்குவமாக அணுக வேண்டும்'' என்று கூறியிருக்கிறார் ரெஜினா.