கனவு வீண் போகவில்லை - பெண் விமான இன்ஜினியர் ஹினா

இந்திய ராணுவத்தில் முதல்முறையாக விமானப்படை போர் விமானிகளாக மூன்று பெண்கள் பொறுப்பேற்ற நிலையில் ஹினா ஜெய்ஸ்வால் என்ற பெண், முதல் விமான இன்ஜினியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கனவு வீண் போகவில்லை - பெண் விமான இன்ஜினியர் ஹினா

இந்திய ராணுவத்தில் முதல்முறையாக விமானப்படை போர் விமானிகளாக மூன்று பெண்கள் பொறுப்பேற்ற நிலையில் ஹினா ஜெய்ஸ்வால் என்ற பெண், முதல் விமான இன்ஜினியராக நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்புத்துறையின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அனைவர் கவனமும் ஹினா மீது திரும்பியுள்ளது.
 இது பற்றி ஹினா, என்ன சொல்கிறார் !
 "எனது கனவு வீண் போகவில்லை. குழந்தைப் பருவம் முதலே ராணுவத்தின் மீது மிகப் பெரிய மரியாதை எனக்கிருந்தது. அப்பொழுதே சிப்பாய்களின் சீருடைகளை அணிந்து கொண்டு கண்ணாடியில் அழகு பார்ப்பேன். விமானத்தில் பைலட்டாக செல்லவேண்டும் என்றெல்லாம் நினைப்பேன். அது தற்போது உண்மையாகி இருக்கிறது'' என்று சொல்லும் ஹினா, சண்டிகர் பகுதியைச் சேர்ந்தவர். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை என்ஜீனியரிங் பட்டப்படிப்பு முடித்தவர்.
 2015-ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் பணியில் சேர்ந்தார். ஆரம்பத்தில் நிலத்தில் இருந்து விமானத்தை வீண் நோக்கி செலுத்தப்படும் ஏவுகணை கண்காணிப்பு பிரிவில் பணியாற்றியவர். தொடர்ந்து பேட்டரி கமாண்டராகவும், ஏவுகணை செலுத்தும் பிரிவு தலைவராகவும், பணியாற்றினார்.
 அவரது திறமையைப் பார்த்த ராணுவ அதிகாரிகள் அவரை விமான இன்ஜினியரிங் படிக்கத் தேர்வு செய்தனர். ஆறு மாதங்கள் கடுமையான பயிற்சிகளை நிறைவு செய்து இப்போது வெற்றி மகுடம் சூட்டியுள்ளார் ஹினா.
 ஜெட் விமானங்கள், போர் விமானங்களில் சிக்கலான விமானக் கருவிகளை கையாள்வதற்கும் அவற்றின் செயல்பாடுகளை கண்காணிப்பது இவரது முதல் பணி. மேலும் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான ஆபத்து மிக்க அதிக குளிர்ச்சிமிக்க சியாச்சின் பனிப்பாறைகளில் சென்று பணியாற்ற அனுப்பப்பட உள்ளார். தவிர, அந்தமான் கடற்கரைப் பிரதேசங்கள், ஆளரவமற்ற எல்லைப்பகுதிகளில் மிகவும் சிக்கலான பணியிடங்களிலேயே இனி அவர் பணியாற்ற உள்ளார். ஹினாவிற்காக சவால்கள் காத்துக்கொண்டு இருக்கின்றன.
 -ராஜன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com