சர்க்கஸ் பயிற்சி பெறும் நடிகை
By DIN | Published On : 28th February 2019 10:16 AM | Last Updated : 28th February 2019 10:16 AM | அ+அ அ- |

"மிர்ஸாபூர்' வெப் சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஸ்வேதா திரிபாதி, தற்போது தமிழில் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகும் "மெஹந்தி சர்க்கஸ்' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். "என்னுடைய நடிப்பு இயற்கையாக இருக்க வேண்டுமென்பதற்காக தமிழகத்தில் சின்னமனூர், மதுரை போன்ற ஊர்களில் உள்ள சர்க்கஸ் கலைஞர்களுடன் சேர்ந்து சர்க்கஸ் பயிற்சிப் பெற்று வருகிறேன். சர்க்கஸ் குழுவில் உள்ள ஒரு பெண் ஊர் ஊராக செல்லும்போது, கொடைக்கானலில் ஒருவாலிபனை காதலிக்கும் அருமையான காதல் கதை இது'' என்கிறார் ஸ்வேதா திரிபாதி.